காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாஜகவில் சேர்ந்தால் அவரை திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று தான் சொல்லவில்லை என எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யான ராகவ் சத்தா அண்மையில் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துவிட்டார். இதையடுத்து அரசியல்வாதிகள் கட்சி தாவுவது குறித்து விமர்சனங்களும், மீம்ஸுகளும் வலம் வரத் துவங்கின. அந்த நேரத்தில் தான் பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் வெளியாகி வைரலானது.
ராகுலுடன் திருமணம்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி மட்டும் பாஜகவுக்கு வந்துவிட்டால் அவரை திருமணம் செய்து கொள்ள நான் ரெடி என கங்கனா ரனாவத் போஸ்ட் போட்டிருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அது கங்கனா போட்ட போஸ்ட் இல்லை. யாரோ போலியாக போஸ்ட் செய்தது. ஆனால் அது தெரியாமல் மக்களோ, அடேங்கப்பா, ராகுல் காந்தியை கட்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாரே கங்கனா. ஆனால் அது கனவிலும் கூட நடக்காது. ராகுல் காந்தியாவது பாஜகவில் போய் சேர்வதாவது என்று சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தார்கள்.
போலி என்ற கங்கனா

போலி போஸ்ட் குறித்து அறிந்த கங்கனா ரனாவத் விளக்கம் அளித்திருக்கிறார். இன்ஸ்டா ஸ்டோரியில் கங்கனா கூறியிருப்பதாவது, இது போலி செய்தி. அரசியலில் இருக்கும் பெண்களை மதிப்பது இல்லை. பொய்யான செய்தியை பரப்புவோர் வெட்கப்பட வேண்டும் என்றார். அரசியலில் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்து வருகிறார் கங்கனா ரனாவத். அவர் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் எமர்ஜென்சி. அந்த படத்தை இயக்கி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடித்ததுடன் அதை தயாரிக்கவும் செய்தார் கங்கனா. ஆனால் எமர்ஜென்சி படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
வருகிறது குயின் 2

2014ம் ஆண்டு திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான குயின் பாலிவுட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் கங்கனா ரனாவத். அந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. குயின் படத்தை இயக்கிய விகாஷ் பெஹல் தான் அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அனுராக் கஷ்யப் தயாரித்த குயின் படத்தில் ராணி மெஹ்ரா எனும் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார் கங்கனா ரனாவத்.
ராணி கங்கனா

குடும்ப நண்பரின் மகனான ராஜ்குமார் ராவும், கங்கனாவும் காதலிப்பார்கள். அந்த காதலை வீட்டில் ஏற்றுக் கொண்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.திருமணத்தின்போது தாலி கட்டாமல் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிடுவார் மாப்பிள்ளை ராஜ்குமார் ராவ். இதையடுத்து திட்டமிட்டபடி ஹனிமூனுக்கு கிளம்புவார் ராணி மெஹ்ரா. காதல் நகரமான பாரீஸுக்கு தனியாக தேனிலவுக்கு செல்வார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சூழல்களால் வாழ்க்கை எப்படி அழகாக மாறுகிறது என்பதை குயின் படத்தில் காட்டியிருந்தார்கள். அதே மாதிரி இரண்டாம் பாகமும் தன்னை அறியும் வகையில் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரஜினி
கங்கனா திருமணம், காதல்

40 வயதாகும் கங்கனா ரனாவத்துக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவர் வாழ்வில் வந்த காதல்கள் தோல்வியில் முடிந்தது. கங்கனாவுக்கு ஏற்கனவே கல்யாணமான ஆண்கள் மீதே காதல் வருகிறது என்று விமர்சிக்கப்பட்டது. அதற்கு கங்கனாவோ, இளம் பெண் மீது கல்யாணமான ஆணுக்கு காதல் வந்தால் அவரை அல்ல மாறாக அந்த பெண்ணை மட்டுமே குறை சொல்கிறார்கள். மக்களின் இந்த மனநிலை மாற வேண்டும் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

