Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காஞ்சிபுரம் இரட்டைக்கொலை: ஹெல்மெட் கும்பலை தேடும் போலீஸ் - முன்விரோதம் காரணம்?

காஞ்சிபுரம் இரட்டைக்கொலை: ஹெல்மெட் கும்பலை தேடும் போலீஸ் - முன்விரோதம் காரணம்?

Samayam Tamil 2 days ago

மிழகம் முழுக்க தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. ஆட்சி மீது வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று சட்டம் -ஒழுங்கு ஆகும்.

தற்போது வரை இந்த கொலை சம்பவங்கள் ஓய்ந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக கடந்த 2026 மார்ச் மாதம் வரை 360 -க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக திருநெல்வேலி பகுதியில்மட்டும் 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சுமார் 30 கொலைகள் நடந்ததாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கக் கூடிய தவெக தலைமையிலான அரசு தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கை குறிப்பிட்டு அதிக அளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்தது. மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலையை மாற்றுவோம் எனவும் கூறி இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் தற்போது தமிழகத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலை நடந்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியள்ளது.

இரட்டை கொலை..

கானா பாடல்களை பாடக்கூடிய இசைக் கலைஞரான இவர்களை மர்மகும்பல் ஒன்று வீடு புகுந்து வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள அம்மணம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவருக்கு பரத் மற்றும் சீனு என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இந்த இரண்டு இளைஞர்களும் கானா பாடல்கள் பாடி வருகின்றனர்.

நேற்றைய தினம் இரவு நடைபெற்ற பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வரத்தும் சீனுவும் வீடு திரும்பி இருக்கின்றனர். அப்போது இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் தனது நண்பர் லோகேஷ் வீட்டில் தங்கி இருந்திருக்கின்றனர். நள்ளிரவு சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென லோகேஷன் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

உள்ளே நுழைந்தவர்கள் பரத் மற்றும் சீனு ஆகியோர் மீது அரிவாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து மர்மகும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும் இந்த இரட்டை கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணங்கள் இருந்ததா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர் போலீசார்.

இளைஞர்களுக்குள் பூசல் ஏற்பட்டு கொலை வரை செல்லும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறிய வண்ணமே இருக்கின்றன மேலும் கொலையாளிகள் தெளிவாக திட்டமிட்டு ஹெல்மெட் அணிந்து வந்ததால் சிசிடிவி காட்சிகளில் தப்பாமல் சென்று இருக்கின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil