Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

கரூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை

Samayam Tamil 4 days ago

கரூர், சின்ன காளிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றிலிருந்து ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேரக்குழந்தைகள் சுவாமி, அதிரன் ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

கரூர், சின்ன காளிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றிலிருந்து ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேரக்குழந்தைகள் சுவாமி, அதிரன் ஆகியோரின் உடல்களை மீட்ட போலீசார் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

கரூர் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு - கிணற்றில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் அடுத்துள்ள சின்னகாளிபாளையம் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வெங்கமேடு கொங்குநகரைச் சேர்ந்த ராமசாமி (63), அவரது மனைவி ஜானகி (60), இவர்களது மகள் சுகுணா (35), பேரக்குழந்தைகளான சிவானி (10), அதிரன் (4) ஆகிய ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராமசாமியின் மகள் சுகுணாவுக்கும், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சிவானி, அதிரன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கடந்த 15 ஆம் தேதி முதல் சுகுணா தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இன்று மாலை சின்னகாளிபாளையத்தில் உள்ள அவர்களது தோட்டத்துக் கிணற்றில் ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் மிதப்பதைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல் நிலைய போலீசார் குடும்பப் பிரச்சினை காரணமாக ஐந்து பேரும் உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கட்சி நிர்வாகிகளுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil