Dailyhunt
கருத்து கணிப்புகள் கண்டு கலங்க வேண்டாம்..திமுக நாடகம் எடுபடாது..அதிமுக வெற்றிபெறுவது உறுதி:எடப்பாடி பழனிச்சாமி

கருத்து கணிப்புகள் கண்டு கலங்க வேண்டாம்..திமுக நாடகம் எடுபடாது..அதிமுக வெற்றிபெறுவது உறுதி:எடப்பாடி பழனிச்சாமி

Samayam Tamil 2 weeks ago

மிழ்நாடு தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக்கொண்டு வருகின்றன. அதில் சில திமுக சாதகமாகவும், சில அதிமுக சாதகமாகவும் உள்ளது.

ஒரு சில கருத்து கணிப்புகளில் திமுக ஆட்சி அமையும் என சொல்லப்படுகின்றது. மேலும் சில கருத்து கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமையும் என கணிக்கப்படுகின்றது. இதுபோல தேர்தல் எக்ஸிட் போல் ரிசல்ட்ஸ் மக்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

கணிப்புக்கள் மாறி மாறி இருப்பதால் உறுதியாக ஆட்சி செய்யப்போவது யார் என்பதை யூகிக்க முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தேர்தல் கணிப்புகள் வெளியான நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை கவனமுடன் இருக்க வேண்டும் என தனது கட்சியினருக்கு வலியுறுத்தினாராம் முக ஸ்டாலின்.

மறுபக்கம் தவெக தலைவர் விஜய் தனது வேட்பாளர்களை நேரில் அழைத்து ஆலோசித்துள்ளார். அப்போது தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் நேரடியாக பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள் என அறிவுறுத்தி இருக்கின்றார் விஜய். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கருத்து கணிப்புகள் குறித்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசியிருப்பது என்னவென்றால், கருத்து கணிப்புகள் கண்டு யாரும் கலங்க வேண்டாம். கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு இல்லை. கருத்து கணிப்புகளை திட்டமிட்டு பரப்பும் சூழ்ச்சி நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. கருத்து கணிப்புகளை உடைத்தெறிந்தே அதிமுக இதுவரை ஆட்சி அமைத்துள்ளது. கண்டிப்பாக அதிமுக கூட்டணி 210 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.

திமுகவின் நாடகம் ஒருபோதும் எடுபடாது, அவர்கள் தோற்கப்போவது தெரிந்துவிட்டது. அதன் காரணமாக தான் இதுபோல கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய் தகவல்களை பரப்பி நம்மை திசைதிருப்பி வருகின்றனர் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் எக்ஸிட் போல் ரிஸல்ட்ஸ் வெவ்வேறு கணிப்புகளை தந்து வந்தாலும் சில கருத்து கணிப்புகளில் திமுக வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காகஎடப்பாடி பழனிச்சாமி இந்த கருத்துக்களை பதிவிட்டு இருப்பார் என தெரிகின்றது. தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை மக்கள் அளித்த வாக்குகள் தான் முக்கியம். எனவே இந்த கருத்து கணிப்புகளை பார்த்து வாக்கு எண்ணும் நாளை நாம் கோட்டைவிட்டுவிட கூடாது இதெல்லாம் நம்மை திசைதிருப்பும் வேலையாக கூட இருக்கலாம். எனவே வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் மற்றும் கட்சியினர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்

நம்பிக்கையுடன் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பார் என தெரிகின்றது. அதுமட்டுமல்லாமல் முன்பு அதிமுக ஆட்சி அமைந்தபோது வெளியான எதிர்மறை கருத்து கணிப்புகளையும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டு பேசினார். இதன் மூலம் கருத்து கணிப்புகள் அப்படியே நடந்து விடாது எனவும் தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில் இன்று today 's chanakya வின் கருத்து கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த கருத்து கணிப்பிலும் திமுக தான் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தவெக இரண்டாம் இடமும் அதிமுக மூன்றாம் இடமும் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவினர் மனம் தளர கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கையாக பேசி வருகின்றார். கண்டிப்பாக 210 தொகுதிகளில் நாம் வெற்றிபெறுவோம் என தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil