Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொலை வெறியில் காத்திருக்கிறேன்.. இடைத்தேர்தல் குறித்து வெளிப்படையாக பேசிய நாதக சீமான்

கொலை வெறியில் காத்திருக்கிறேன்.. இடைத்தேர்தல் குறித்து வெளிப்படையாக பேசிய நாதக சீமான்

Samayam Tamil 1 month ago

மிழ்நாடு அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலுக்கு பெரும் எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர். தற்போதைய சூழலில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ள நிலையில், இன்னமும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகளும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நாதக சீமான் இடைத்தேர்தல் குறித்து பேசியுள்ளது பெருமளவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவர் தன்னுடைய சொந்த தொகுதியில் களமிறங்கிய காரணத்தால், இந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைவார் என நாதகவை சார்ந்தவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். ஆனால் காரைக்குடியில் சீமான் வெற்றி வாய்ப்பை தவற விட்டது, நாதக தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது.

இதனிடையில் தமிழ்நாட்டில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் சீமான் களமிறங்க வேண்டுமென தொண்டர்கள் பெரும் எதிர்பார்க்கின்றனர். அதே போல் அம்பாசமுத்திரம் தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து நாதக கூட்டத்தில் சீமான் பேசியுள்ளது, அவருடைய தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக அவர் பேசுகையில் களமும், காலமும் நம்முடைய கையில் தான் உள்ளது. வெல்ல முடியாத படை என்று ஒன்றே உலக வரலாற்றில் இல்லையென ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் சொல்கிறார். இதெல்லாம் அவ்வளவு பெரிய படை கிடையாது. பம்பரம் மாதிரி சுத்தும் போது வேகமாக சுத்தும். ஆணி எங்க இருக்குன்னே தெரியாது. திடீர்ன்னு கீழ விழுகும். அப்போ நம்ம ஆக்கரோட தயாராக இருக்கனும். ஒரே போடு. ரெண்டா பொளக்கனும் என்றார்.

தொடர்ந்து இடைத்தேர்தலை எப்போ வைப்பாங்கன்னு நானும் வெறியோட தான் இருக்கேன். கொலை வெறியோட இருக்கேன் என சீமான் மேடையில் பேச, கீழே அமர்ந்திருந்த தொண்டர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய அவர், வெறியாகிட்டு இருக்கு. பார்த்துட்டே இரு. என்ன பண்றேன் எனக்கே தெரியாது. மாற்று என்பது கோட்பாட்டு அடிப்படையில் கட்டியெழுப்பியது நான்தான். அது விளைந்து அறுவடைக்கு வரும் சமயத்தில், வேறொருவர் கைக்கு போய்விட்டது.

அறுபது நாட்களிலே வாக்கு செலுத்திய மக்கள் ஐயோ, அப்பா இப்பவே கண்ணை கட்டுதேன்னு சொல்றான். இன்னும் நாலரை ஆண்டுகள் உள்ளது. இதற்கு ஒரே மருந்து பொறுமை தான். சத்தியத்தின் பக்கம் நில்லுங்கள். நாம் தோல்வி அடையலாம். சாகலாம். ஆனால் சத்தியம் தோற்று போனதாக சரித்திரம் இல்லை. உறுதியாக ஒருநாள் வெல்வோம் என நம்பிக்கையுடன் பேசியுள்ளார் சீமான். அவரின் இந்த பேச்சு நாதகவினர் மத்தியில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

சீமான் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதுவும் பொது வேட்பாளராக அவர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இப்படியான நிலையில் இடைத்தேர்தலுக்காக கொலை வெறியுடன் காத்திருப்பதாக சீமான் பேசியுள்ளது வைரலாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil