Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொளுத்தும் வெயில்: நீரிழிப்பை சமாளிக்க உதவும் ORS கரைசல் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

கொளுத்தும் வெயில்: நீரிழிப்பை சமாளிக்க உதவும் ORS கரைசல் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

Samayam Tamil 1 month ago

வெயிலில் நீண்ட நேரம் அலைவது, வயிறு கோளாறுகள் அல்லது குறைவாக தண்ணீர் பருகியது காரணமாக நீரிழப்பு ஏற்படலாம்.

இதற்கு ORS கரைசல் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. அதனை மருந்தகங்களில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் தயாரிக்க செய்யலாம்


வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்படும் நீரிழப்பை சமாளிக்க ORS கரைசல் பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலில் இழந்த நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்க உதவிப்புரிகிறது. பல ஆண்டுகளாக மருத்துவ நிபுணர்களாலும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

​International Journal of Epidemiology-ல் வெளியான ஆய்வறிக்கையின்படி, ORS கரைசல் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு தொடர்பான இறப்புகளை கணிசமாக குறைக்க உதவுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. WHO கூற்றுப்படி, உலகளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு மூன்றாவது முக்கிய காரணமாக வயிற்றுப்போக்கு நோய் திகழ்கிறது.ORS கரைசல் தயாரிக்கும் முறை

ORS கரைசல் செய்வதற்கு உப்பு, சர்க்கரை, தண்ணீர் ஆகிய மூன்று பொருட்கள் போதுமானது ஆகும்.

  • 1 லிட்டர் தண்ணீரில் 6 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அதாவது 1 டீஸ்பூன் 5 கிராம் சர்க்கரை ஆகும்.
  • அடுத்து, அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். அளவில் கவனமாக இருக்க வேண்டும். உப்பு அதிகமானால் நீரிழப்பு மோசமாக வாய்ப்புள்ளது.
  • அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அவை தண்ணீரில் முழுமையாக கரையும் வரை கிளற வேண்டும்.
  • கரைசல் தயாரித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடுவது சிறந்த முடிவாகும். மூடிய பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்து சேமிக்க செய்யலாம்

ORS கரைசல் குடிக்கும் முறை

நீரிழப்பு ஏற்பட்டால், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது நீண்ட நேரம் கொளுத்தும் வெயிலில் சுற்றினால் மட்டும் ORS கரைசல் பருக செய்யலாம். மற்ற நேரங்களில் சாதாரண தண்ணீர் குடிப்பது போதுமானது ஆகும்.

ORS கரைசலை ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்க வேண்டும். சில மணி நேரங்களுக்கு சிறிது சிறிதாக குடித்து வர வேண்டும். இது உடல் திறம்பட உறிஞ்சிட உதவியாக இருக்கும்.

வயதினருக்கு ஏற்றாற்போல், ORS கரைசல் எடுத்துகொள்ளும் அளவு மாறுபடும்.


ORS கரைசலில் சுவையூட்டிகள் சேர்ப்பது

வீட்டில் தயாரிக்கும் ORS கரைசலில் சுவை பெரிதாக இருக்காது. சுவையை விரும்புவர்கள் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறு சேர்க்க செய்யலாம். ஆரஞ்சு ஜூஸ் சேர்க்கும் பட்சத்தில் சுவையுடன் கூடுதல் பொட்டாசியம் சத்தும் கிடைக்கும்.

அதிகமாக சேர்க்காமல் பார்த்துகொள்ள வேண்டும். அவை சர்க்கரை - உப்பு சமநிலையை மாற்றிவிடக்கூடாது. முடிந்தவரை சுவையூட்டிகள் சேர்க்காத ORS கரைசல் குடிப்பதே சிறந்த முடிவாகும்.


தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் வழிகாட்டு நெறிமுறை
  • அங்கீகரிக்கப்பட்ட ORS மட்டுமே மருந்து கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.
  • ORSL, ORSL Plus, ORS Fit போன்ற பெயர்களில் FSSAI மூலம் அங்கீகரிக்கப்பட்டவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • அந்த பாக்கெட்டில் நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்படும் இடம், காலாவதியாகும் தேதி, உரிமம் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும்
  • வெப்ப அலையால் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் ORS-யை மட்டுமே வாங்கிக் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.​

நீரிழப்பு எச்சரிக்கை அறிகுறிகள்

அதிகமாக தாகம் எடுத்தல், வாய் வறட்சி, சிறுநீர் நிற மாற்றம், சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை நீரிழப்பு எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும். இவை தென்பட்டால் காலம் தாமதிக்காமல் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

நீரிழிப்பை சமாளிக்க ORS கரைசல் சிகிச்சை மட்டுமே நம்பியிருக்காமல் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, வெயிலில் நீண்ட நேரம் விளையாடும் குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துகொள்ளவும்


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil