தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 104 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 73 இடங்களிலும்,திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 52 இடங்களிலும், முன்னிலையில் இருக்கக்கூடிய நிலையில் நாம் தமிழர் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
விஜய்க்கு கூடும் கூட்டம் எதுவும் அரசியல் களத்தில் எதிரொலிக்காது என்ற பேச்சுக்களை எல்லாம் விஜய் பொய்த்துபோகும்படி செய்துள்ளார். இந்த சூழலில்தான் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் தவெக -வின் முன்னிலையின் விவரங்களை பார்த்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
விமர்சனங்களை உடைத்த விஜய்
2024 ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜய்க்கு ஏகோபித்த மக்கள் ஆதரவு எழுந்தது. ஆனால் அதே சமயத்தில் விஜய் -ன் அரசியல் செயல்பாடு குறித்து பல கட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
- விஜய் Work From Home அரசியல் செய்கிறார்.
- மக்களை நேரில் சென்று சந்திக்க தயங்குகிறார்
- தமிழக வெற்றி கழகத்தினருக்கு அரசியல் புரிதல் இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை.
- கரூர் விவகாரத்தில் விஜய் இன்னும் பொறுப்புடன் செயல்பட்டு இருக்க வேண்டும்.
- விஜய்க்கு கூடும் கூட்டம் அனைத்தும் இறை கவர்ச்சிக்கு கூடும் கூட்டம். இந்த கூட்டம் வாக்காக மாறாது.
உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் விஜய்யை நோக்கி வைக்கப்பட்டன. ஆனால் விஜய் அந்த விமர்சனங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கி 107 இடங்களில் முன்னிலையில் இருக்கிறார். மேலும் கரூர் சம்பவம் விஜய்க்கு ஆதரவான மற்றும் அனுதாப அலையே உருவாக்கி இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாது விஜய் மக்களிடம் தன்னை அண்ணனாகவும், தம்பியாகவும்,தாய் மாமனாகவும் கொண்டு போய் சேர்த்த எமோஷனல் கனெக்சன் தேர்தல் களத்தில் வேலை செய்திருக்கிறது.
திமுக தோல்வியின் பின்னணி என்ன?
திமுகவின் பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுவது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை. அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு தமிழகம் முழுக்க நிலவிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது
மேலும் விஜய் முன்னெடுத்த வாரிசு அரசியல், ஊழல் பிரச்சாரம் உள்ளிட்டவை திமுகவிற்கு எதிராக பிரதிபலித்துள்ளது.

