நம்முடைய வாழ்க்கையில் செல்வம் சேர வீட்டில் மங்களகரமான சூழல் நிலவ பல்வேறு விதமான குறிப்புகளை தருகிறது வாஸ்து சாஸ்திரம்.
ஒரு இடம் மற்றும் வீட்டினுடைய திசை, எந்த திசையில் எந்த பொருட்கள் வைக்க வேண்டும், அறை அமைய வேண்டும்உள்ளிட்ட பல்வேறு விதமான அற்புதம் குறிப்புகளை வாஸ்து தருகின்றது. இந்த பதிவில் குபேர மூலையில் நாம் வைக்க வேண்டிய பொருட்கள் மற்றும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான மக்கள் கடினமாக உழைப்பதன் காரணமே தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வீட்டில் செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்காக தான். இருப்பினும் சில மோசமான நம்முடைய பழக்கவழக்கங்கள் அல்லது வீட்டை பராமரிக்கும் விதம் நம்மை பெரிய அளவில் செல்வதை சேர்க்க விடாத நிலையை தருகிறது. வீட்டில் செல்வம் நிலையை மேம்படுத்த வீர மூலையில் எப்படிப்பட்ட பொருட்களை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.குபேர மூலை

வீட்டினுடைய வடக்கு பகுதி , வட கிழக்கு பகுதி குபேர மூலை எனவும், குபேரனின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சில குறிப்பிட்டு பொருட்களை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதோடு, சில பொருட்களை வைக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. என்னென்ன பொருட்களை வைத்தால் செல்வம் பெருகும் என இங்கு பார்ப்போம்.
மீன் தொட்டி, சுத்தத்தைப் பராமரியுங்கள்

மீன் தொட்டி
நீங்கள் நதிகள் நிதி நெருக்கடி சந்திப்பவராக இருந்தால், உங்களுடைய வீட்டின் வடக்கு திசையில் ஒரு சிறிய மீன் தொட்டியை வைக்கவும்.மீன் தொட்டி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறையான ஆற்றலை உருவாக்கும் நிதி சிக்கலை தீர்க்கவும் உதவும்.
சுத்தத்தைப் பராமரியுங்கள்
ஒருவருடைய வீட்டின் வடக்கு திசையில் உள்ள பகுதியில் மிகவும் சுத்தமாக பராமரிப்பது அவசியம். பகுதியில் குப்பை சேராமல் பராமரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குப்பைகள் மற்றும் அசுத்தமான நிலையில் இந்த குபேர மூல இருந்தால் அந்த வீட்டில், எதிர்மறைத்தன்மை அதிகரித்து, வீட்டில் மனக்கஷ்டம் அல்லது மன நிம்மதியற்ற சூழல் உருவாகும்.
பணப் பெட்டகம், குபேர யந்திரம்

பணப் பெட்டகம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களுடைய வீட்டின் பணப் பெட்டகம் பீரோ அல்லது லாக்கர் இந்த வடக்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டும். அதாவது அந்த பெட்டகம் தெற்கு திசையில் இருக்கும்படியும், அதனுடைய கதவு வடக்கு திசையை நோக்கி திறக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும். ஆன்மீக நம்பிக்கைகளின் படி வடக்கு திசையானது மகாலட்சுமி தேவி மற்றும் குபேரனின் இருப்பிடமாக கருதப்படுகிறது.
குபேர யந்திரம்
வீட்டின் வடக்கு திசையில் குபேரனின் நல்லவர்களை தரக்கூடிய குபேர யந்திரத்தை வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது உங்களுடைய நிதி சிக்கலை தீர்க்க உதவும்.
கண்ணாடி வைக்கலாம், நீரூற்று

கண்ணாடி வைக்கலாம்
உங்கள் வீட்டின் வடக்கு திசையில் ஒரு கண்ணாடியை வைப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இது மங்களகரமான சூழலை வீட்டில் கொண்டு வரும்.
நீரூற்று (Water Fountain)
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு வீட்டில் சிறிய நீரூற்று வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதை வடக்கு திசையில் வைப்பது மேலும் விசேஷமாக அமையும். நீரூற்றானது வீட்டில் ஆற்றலை சம நிலைப்படுத்த உதவுகிறது. அந்த நீரற்றில் வரக்கூடிய நீர் சுத்தமானதாகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் விதத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதுபோன்று பராமரிக்க முடியாவிட்டால் அதனை தவிர்ப்பது நல்லது.
பொறுப்புதுறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களின் முழுமையான உண்மைத்தன்மை அல்லது துல்லியத்திற்கு நாங்கள் பொறுப்பேற்கவில்லை. விரிவான தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரை அணுகவும்.

