இந்தியக் குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் மூன்று நாள் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுகிறது. இதனிடையில் கோயம்புத்தூருக்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனை தவெக அமைச்சர் சம்பத்குமார் வரவேற்றுள்ளார். அப்போது துணை ஜனாதிபதிக்கு அவர் அளித்துள்ள புத்தகம் இணையத்தில் கவனம் பெற்று கொண்டுள்ளது.
துணை குடியரசு தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இன்றைய தினம் கோவைக்கு வந்த அவரை விமான நிலையத்தில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் வரவேற்றனர். அப்போது ஆளுநர் அர்லேகர் துணை குடியரசு தலைவருக்கு பூங்கொத்து வழங்கினார்.
அமைச்சர் சம்பத்குமார் கொடுத்த புத்தகம்
இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், துணை ஜனாதிபதியை வரவேற்கும் போது புத்தகம் ஒன்றினை வழங்கினார். அந்த புத்தகம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது. அதாவது ஜோசப் விஜய் உன் பேரே வரலாறு என்ற தலைப்பிட்ட புத்தகத்தினை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி அமைச்சர் சம்பத்குமார் வரவேற்றுள்ளார்.
ஜோசப் விஜய்
இந்த புத்தகம் தற்போது இணையத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. முதல்வர் ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். அவரின் இந்த சாதனையை சொல்லும் விதமாக இந்த புத்தகம் இருக்குமென கூறப்படுகிறது. இந்த புத்தகத்தினை தற்போது துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வழங்கியுள்ளார் தவெக அமைச்சர். இதனை தற்போது தவெகவினர் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி பல விதமான கமெண்ட்களை குவித்து கொண்டிருக்கின்றனர்.
சட்டமன்றத்தில் ஒலித்த பாடல்
இதற்கிடையில் நேற்றைய தினம் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாத்தின் போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பாடல் பாடியது சோஷியல் மீடியாவில் வைரலானது. அதாவது எதிர்க்கட்சி தலைவருக்கு பிடிக்குமென சொல்லி, நான் படித்தேன் காஞ்சியிலே என்ற பாடலை பாடியவர், மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தன் மக்கள் நலம் ஒன்றையே மனதில் கொள்ளுவார் என பாடினர்.
இதனையடுத்து எதிர்க்கட்சிகள் மானிய கோரிக்கைக்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் என கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தன. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து பேசுகையில், அமைச்சர் நேற்றே பேச வேண்டும். இன்றைக்கு தான் ஆரம்பித்து, பாட ஆரம்பித்து விட்டார். இது சாட்சிக்கு என்ன வேற கூப்பிட்டு இருக்கார் என கிண்டலடித்து பேசினார். இந்த விவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

