Dailyhunt
லெஜண்ட் சரவணன் நினைத்ததை செய்து முடிப்பார்.. பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரலை.. பாக்யராஜ்

லெஜண்ட் சரவணன் நினைத்ததை செய்து முடிப்பார்.. பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரலை.. பாக்யராஜ்

Samayam Tamil 1 month ago

லெஜண்ட் சரவணாவின் நடிப்பு முதல் படத்தில் சில விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தன்னை முழுவதுமாக நடிப்பில் மெருகேற்றி இரண்டாவது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

துறை செந்தில்குமார் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் பிரம்மாண்டமாக 'லீடர்' உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்துடைய இசை வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

லெஜண்ட் சரவணனின் லீடர்

கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் கடைசியாக சூரி நடிப்பில் 'கருடன்' இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நிலையில், தற்போது லீடர்' படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணன், ஆண்ட்ரியா ஜெர்மியா, பாயல் ராஜ்புட், சாம், சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் 'லீடர்' வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகருமான பாக்யராஜ், 'லீடர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

பாக்யராஜ் பேச்சு

அவர் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, லெஜண்ட் சரவணன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நினைத்ததை தைரியமாக செய்து முடிக்கக்கூடியவர். தன்னம்பிக்கையுடன் முன்னேறி செல்வார். அது எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தமான விஷயம். ஐம்பது வயதை தாண்டி லெஜண்ட் சரவணன் நடிக்க வந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் 25 வயது வாலிபர் போன்று உடலை வைத்துள்ளார்.

சினிமா துறையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்

பணம் சம்பாதிப்பதற்காக சரவணன் சினிமாவுக்கு வரவில்லை. நினைத்ததையும் சாதிக்கவும், சினிமாவை சேவையாகவும் எண்ணி வந்துள்ளார். இந்த துறையில் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும். நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என லெஜண்ட் சரவணன் குறித்து பேசியுள்ளார். தொடர்ந்து படம் குறித்து அவர் பேசுகையில், டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போதே, இந்த படத்தின் வெற்றி தெரிகிறது.

படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம்

இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு சவாலான முயற்சி இது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் டிரெய்லர் உருவாக்கியுள்ளது. கதையும், எமோஷனல் காட்சிளும் நிறைந்த முழுமையாக படமாக லீடர் இருக்கும் என தெரிவித்துள்ளார். அதோடு இயக்குனர் துரை செந்தில்குமார் பேசும்போது, இப்படத்தின் கதை கொரோனா லாக்டவுன் காலத்திலேயே உருவாக்கப்பட்டு விட்டது. அந்த சமயத்தில் கருடன் இயக்குவதற்கு வாய்ப்பு வந்தது.



இயக்குனர் துரை செந்தில்குமார்

நான் லெஜண்ட் சாரிடம் ஒரு சின்ன ப்ராஜெக்ட் போய்ட்டு வந்துறேன் சொன்னேன். அதற்குள் அவர் வேறு ஏதாவது பெரிய இயக்குனருடன் சென்று விடுவார் என நினைத்தேன். ஆனால் கதையின் மீது நம்பிக்கை வைத்து எனக்காக காத்திருந்தார். இப்படம் சிறப்பாக வந்துள்ளது என பேசியிருந்தார். இதனிடையில் 2026 ஆம் ஆண்டுடைய மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக லீடர் இருக்குமென்று நம்புவதாக கூறியிருக்கிறார் லெஜண்ட் சரவணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil