Dailyhunt
LIK பிரதீப் ரங்கநாதனை நடுமண்டையில் நங்குனு கொட்டிய தேவா:வீடியோ பார்த்தீங்களா மக்களே?

LIK பிரதீப் ரங்கநாதனை நடுமண்டையில் நங்குனு கொட்டிய தேவா:வீடியோ பார்த்தீங்களா மக்களே?

Samayam Tamil 1 week ago

பிரபலமாகிவிட்ட ஜீவா, தேவா: தேவா, ஜீவா என்கிற சகோதரர்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ரெண்டே பேருக்கு இடையே தான் போட்டியே என அனிருத்துக்கு போட்டியாக இசையமைத்து அவர்கள் வீடியோ வெளியிட அது வைரலானது.

அந்த வீடியோவை பார்த்து அனிருத் பாராட்டினார். அதன் பிறகு தேவாவும், அவரின் தம்பி ஜீவாவும் மிகவும் பிரபலமாகிவிட்டார்கள். டான்ஸ் புயல் பிரபுதேவா தன் நடிப்பில் உருவாகியிருக்கும் மூன்வாக் படத்தை விளம்பரம் செய்ய தேவா, ஜீவாவை வைத்து வீடியோ வெளியிட்டார்.

அதில் அந்த பொடுசுகள் பிரபுதேவாவின் டான்ஸையே கலாய்த்தார்கள். அதன் பிறகு சாய் அப்யங்கருடன் வீடியோவில் வந்தார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் விளம்பர வீடியோவில் வந்திருக்கிறார்கள் ஜீவாவும், தேவாவும்.

குட்டி பி.ஆர்.,பெரிய பி.ஆர்.: வழக்கமாக ஹாய் கைஸ், நான் தான் உங்க தேவா, இது என் தம்பி ஜீவானு ஆரம்பிப்பார்கள். ஆனால் இந்த வீடியோவில் நான் தான் உங்கள் குட்டி பி.ஆர். இவன் தான் என் தம்பி பெரிய பி.ஆர். என்று ஆரம்பித்திருக்கிறார் தேவா. அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் மாதிரி சட்டையில் இருக்கும் கண்ணாடியை ஸ்டைலாக எடுக்கிறேன் என்று கீழே போட்டுவிட்டார் தேவா. அவராவது பரவாயில்லை. ஆனால் அந்த ஜீவாவோ செல்போனை தூக்கிப் போட்டு பிடிக்கிறேன் என கீழே போட்டுவிட்டு அய்யோ போச்சேனு ஃபீல் செய்திருக்கிறார்.

இந்த வாண்டுகள் கண்ணாடியையும், செல்போனையும் கீழே போட்டுவிட்டு ஏய் பி.ஆர். இங்க வானு பிரதீப் ரங்கநாதனை அழைத்து அவர் மண்டையில் கொட்டு வைத்திருக்கிறார் தேவா. பொடியனிடம் அடி வாங்கியதும் கண்ணாடியை எப்படி எடுக்கணும் என்று சொல்லிக் கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். தற்போது ஃபானு கத்தும் ட்ரெண்ட் இருக்கிறது. இந்நிலையில் பிரதீப் மாஸ் காட்டுவதாக தேவா கூற ஃபா போட்டு வீடியோவை முடித்திருக்கிறார்கள்.
முன்னதாக கல்வி குறித்து அந்த சிறுவர்கள் வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்த்தார்கள். இதையடுத்து ஜீவா, தேவாவை வரவழைத்து பாராட்டினார் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் ரிலீஸ் தேதி தள்ளித் தள்ளி சென்று ஒரு வழியாக ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. அதே நாளில் தான் அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துவிட்ட நட்டியின் த.நா. 2026 படமும் ரிலீஸாகவிருக்கிறது. உமாபதி ராமையா இயக்கியிருக்கும் த.நா. 2026 படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

விக்கி படம்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் ரிலீஸாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. காத்து வாக்குல ரெண்டு காதல் தான் கடைசியாக வெளியான படம். அந்த படத்தை ரிலீஸ் செய்துவிட்டு காதலி நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். மகன்கள் உலக், உயிர் பிறந்து வளர்ந்து அவர்கள் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.
இதற்கிடையே பேட்டி ஒன்றில் தனுஷை பற்றி பெருமையாக பேசியிருப்பதுடன் அவருடனான நட்பு முறிந்துவிட்டது மிகப் பெரிய இழப்பு என்று ஃபீல் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். தனுஷிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும், அவர் தனக்கு அப்பா மாதிரி என்றும் கூறியிருக்கிறார் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி இயக்குநர்.

அவர் ஃபீல் செய்த பிறகு நயன்தாராவை பற்றி தனுஷ் நல்லவிதமாக முன்பு பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர் லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil