Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நிற்க வேண்டுமா.. காங்கிரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி - உடையும் 10 ஆண்டு கூட்டணி?

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நிற்க வேண்டுமா.. காங்கிரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி - உடையும் 10 ஆண்டு கூட்டணி?

Samayam Tamil 2 weeks ago

மிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று ஒரு மிகப்பெரும் வரலாற்று சாதனையில் இணைந்துள்ளார்.

ஆனாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் காவேரிக்கா ஆட்சி அமைக்காமல் தத்தளித்து வருகிறது. இந்த சூழலில் தான் ஆட்சி அமைக்க ஆதரவளிக்குமாறு காங்கிரசுக்கு கடிதம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி

தேர்தலுக்கு முன்பே திமுக காங்கிரஸ் இடையேயான கூட்டணி உடைந்துவிடும் என சொல்லப்பட்டது. பத்து ஆண்டுகள் வெற்றி கூட்டணியாக செயல்பட்ட திமுக காங்கிரஸ் உடைய விஜய் வரவற்குப் பிறகு சலசலப்பு எழுந்தது.

அதன் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்று கோரிக்கையை பொதுவெளியில் வைத்து திமுகவை சங்கடப்படுத்தியது என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த கூட்டணி விவகாரங்களை சரிகட்டி 28 தொகுதிகள் ஒரு மாநிலங்களவை எம்பி என்ற முடிவில் இரண்டு கட்சிகளும் ஒத்து போய் கூட்டணியை உறுதி செய்தன.


இந்த இந்த சூழலில் தான் பெரும்பான்மைக்காக தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக-வை நுழைய விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் -ம் விஜய் -ன் அழைப்பை ஏற்கலாம் என சொல்லப்படுகிறது.

மாணிக்கம் தாகூர் டிவீட்!

இந்த சூழலில்தான் இதுகுறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர், "திமுக அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. அமைச்சரவையில் உள்ள பாதி அமைச்சர்கள் பதவி இழந்துள்ளனர். எங்களின் எந்தத் தவறும் இன்றி பிணைய சேதத்தை எதிர்கொண்டோம்.தற்போது பாஜக தமிழகத்தின் மீது கண் வைத்துள்ளது. நம் முன் உள்ள கேள்வி தெளிவானது எனக்குறிப்பிட்டார்.

இரண்டு கேள்விகள்!

மேலும் காங்கிரஸ் தலைமைக்கு இரு கேள்விகளை முன்வைத்துள்ளார் மாணிக்கம் தாகூர்

  1. மக்கள் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் நிற்பதா?
  2. அல்லது பாஜகவுக்கு எதிராக போராடிய சக்தியுடன் ஒன்றிணைந்து தமிழகத்தில் பாஜகவை ஆட்சி செய்ய விடாமல் போராட வேண்டுமா?

மாணிக்கம் தாகூர் தொடர்ச்சியாக திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறார். மேலும் விஜய் -ன் வரவு காங்கிரசுக்கு மற்றும் ஒரு கதவை திறந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆதரவு கோரிக்கை!

தவெக ஆட்சி அமைக்க கூடுதலான இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அவர் நாளை முதல்வராகப் பதவி ஏற்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், இன்று ஆட்சி அமைத்து உரிமை கோர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil