சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில் இப்போது சந்திக்கும் மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு மே 15ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ளார்.
இதனால் வைகாசி மாதம் பிறக்க உள்ளது. இந்த மாதத்தில் மேஷம், கடகம் உள்ளிட்ட 5 ராசிகளை சேர்ந்த நண்பர்களுக்கு தங்களுடைய தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த லாபமும், சமூகத்தில் நல்ல மரியாதையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சூரிய பெயர்ச்சி மே 15 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நடக்க உள்ளது. இதனால் பிறக்க உள்ள வைகாசி மாதத்தில் சூரியனின் அமைப்பும் அவரின் அருளால் மேஷ ராசி, சிம்மம் உள்ளிட்ட 5 ராசிகளின் வாழ்க்கையில் முன்னேற்ற உயர உள்ளது. அவர்கள் செய்யக்கூடிய வேலை, தொழிலில் நல்ல வெற்றியை பெறுவார்கள். நவகிரகங்களின் தலைவரான சூரியனின் அமைப்பால் எந்தெந்த ராசிகள் வெற்றி மற்றும் பணியில் முன்னேற்றத்தையும், சமூகத்தில் மதிப்பும், வளம் பெற உள்ளார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.மேஷம் வைகாசி மாத ராசி பலன்

மேஷ ராசிக்கு மேஷ ராசிக்கு சூரிய பகவான் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் சேந்திருக்கக்கூடிய இந்த மாதத்தில், பலவிதத்தில் அவர்கள் சுப பலன்களை பெறுவார்கள். முன் எப்பொழுதும் விட உங்களுடைய மன தைரியமும், நம்பிக்கையும், குடும்பம் மற்றும் பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்களுடைய அருமைத் திறன் அதிகரிப்பதோடு, மக்கள் மத்தியில் உங்களுடைய வசீகரத்தன்மை அனைவரையும் ஈர்க்கும். குடும்பத்தினருடன் உறவு மேம்படும். உங்கள் காதல் வாழ்க்கையில் சிறப்பான காலகட்டமாக அமையும். இந்த மாதத்தில் உங்களுடைய உடல் நலனில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம் வைகாசி மாத ராசி பலன்

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் உங்களுடைய வருமானத்தை கணிதமான அளவு உயர்த்தும் விதத்தில் வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய நீண்ட கால ஆசைகள் நிறைவேறுவதோடு, நீண்ட காலமாக தடைபட்டு வந்த பணிகள் முழுமை அடைய நல்ல சூழல் உருவாகும்.
பணியிடத்தில் உங்களுடைய மேலதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால் திட்டமிட்ட வேலைகளில் சரியாக முடிக்க முடியும். தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய நபர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியை எதிர்பார்க்கலாம்.
சிம்மம் வைகாசி மாத ராசிபலன்

சிம்ம ராசி அதிபதியான சூரியன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக கூடிய வைகாசி மாதத்தில் உங்களுக்கு, பல வழிகளில் நன்மைகள் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் அதை வலுப்படுத்தும் விதமாக ஆத்ம காரகன் சஞ்சரிப்பதால் உங்களுடைய தொழில் மற்றும் சமூக பணிகள் தொடர்பான விஷயங்களில் பெரிய அளவில் வெற்றியை அடைவீர்கள்.
சூரியனின் பெயர்ச்சி உங்களுடைய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தேடித்தரும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். உங்களுடைய பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பீர்கள். சிறப்பான பணி செயல்பாடுகளால் அனைவரையும் கவர்வீர்கள்.
விருச்சிகம் வைகாசி மாத ராசி பலன் .

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதத்தில், சூரிய பகவான் சம சப்தம ஸ்தானத்தில் அமர உள்ளார். இது உங்களுடைய தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வெற்றியை பெறுவதற்கான நல்ல வாய்ப்புகளை வழங்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சற்று பிடிவாதமாக, கடுமையாகவும் நடந்து கொள்ள நேரிடும்.
உணர்ச்சிவசப்படுவதும், கோபப்படுவதை தவிர்த்து நிதானமாக நடந்து கொண்டால் நன்மைகள் அதிகமாக நடக்கும். உறவுகளில் உள்ள இறுக்கமான சூழலை விடுத்து அனைவரிடமும் ஒத்துழைத்து நடந்து கொள்வது நல்லதும். இந்த காலத்தில் உங்கள் வாழ்க்கை துணை மற்றும் தொழில் கூட்டாளிகள் மூலம் ஆதரவும் எதிர்பார்த்த நன்மைகளும் பெறுவீர்கள். சிறப்பான செயல்பாடுகள் மூலம் உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வீர்கள்.
தனுசு வைகாசி மாத ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த வைகாசி மாதத்தில் நிவாரணம் கிடைக்க கூடியதாக இருக்கும். அரசு உள்ளவர்களுக்கு நன்மைகள் அதிகம் பெறுவார்கள். ராசிக்கு 5 ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலே சூரியனின் சஞ்சாரம், உங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகள் மூலம் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும்.
இந்த மாதத்தில் கடன் சுமையிலிருந்து நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். அரசுத்துறையில் வேலை செய்பவர்கள் அல்லது அரசு தொடர்பான பணிகள் வேகமாக முடிக்க முடியும். முக்கிய பணிகளுக்காக எதிர்கால திட்டங்களுக்காக எடுக்கும் முயற்சிகள், முதலீடு திட்டங்கள் சாதகமான பலனை தரும். அரசுத் துறையின் மூலம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். உங்கள் எதிரிகளை எளிதாக சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள்.

