சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் நான்கு நாட்களில் வெளியாக இருக்கின்றன. அதற்கு முன்னதாக நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
பலர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்ட நிலையில் அதில் பெரும்பாலும் திமுக தான் இம்முறை ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு சில கருத்து கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் விஜய்யின் தவெகவிற்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது.
சுமார் 15 -25 % வாக்குகளை தவெக பெறுவார்கள் என கருத்து கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் axis my india வெளியிட்ட கருத்து கணிப்பில் தவெக பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர மற்ற அனைத்து கருத்து கணிப்புகளிலும் தவெகவிற்கு மூன்றாம் இடம் தான் கிடைத்துள்ளது.
கருத்து கணிப்புகள்
இருப்பினும் இதையெல்லாம் மீறி தவெக வரலாறு படைக்கும், ஆட்சியை பிடிக்கும் என செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் எக்ஸிட் போல் குறித்து பல கட்சியினர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருபக்கம் திமுகவினர் எக்ஸிட் போல் ரிசல்டால் மகிழ்ச்சியில் இருந்தாலும் மறுபக்கம் தேர்தல் முடிவு வெளியாகும் வரை கவனமுடன் இருக்க வேண்டும் என முக ஸ்டாலின் தனது நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடம் தெரிவித்து இருக்கின்றார்.
எக்ஸிட் போல் குறித்து அதிமுக
மறுபக்கம் அதிமுக தலைமை இந்த கருத்து திணிப்புகளை எல்லாம் முறியடித்து வெற்றிபெறுவோம் என தெரிவித்து இருக்கின்றனர். இதைப்பற்றி அதிமுக கூறியது என்னவென்றால், நாங்கள் எப்போதும் கருத்து கணிப்புகளை முறியடிப்போம். மேலும் எங்களுக்கு சாதகமாக வரும் கருத்து கணிப்புகளை காட்டிலும் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம். எங்களுக்கு சாதகமாக வெளியாகும் கருத்து கணிப்புகளை காட்டிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று அதிமுக வரலாறு படைத்துள்ளது.
வரலாறு படைப்போம்
எனவே 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு தேர்தலை போல மிகப்பெரிய வெற்றியை பெற்று வரலாறு படைக்க போகின்றோம் என்கின்றனர் அதிமுகவினர். இந்நிலையில் தேர்தல் கணிப்புகள் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாக தான் உள்ளது. ஆனால் இதையெல்லாம் நம்ப முடியாது ,மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு என எதிர்க்கட்சியினர் சொல்கின்றனர். மறுபக்கம் தவெகவினரும் கருத்து கணிப்புகளை எல்லாம் மீறி வெற்றி பெற்று வரலாறு படைப்போம், விசில் புரட்சி செய்வோம் என்கின்றனர்.
மும்முனை போட்டி
இப்படி எக்ஸிட் போல் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் இம்முறை மும்முனை போட்டி நிலவும் என்பது மட்டும் உறுதியாக தெரிகின்றது. இதன் மூலம் இந்த தேர்தலில் தவெக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. 20 முதல் அதிகபட்சமாக 30 தொகுதிகளில் தவெக வெற்றிபெறும் என்பது அனைத்து கருத்து கணிப்புகளை பார்க்கும்போதும் தெரிகின்றது. ஆனால் தவெகவினரை பொறுத்தவரை இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
மறுபக்கம் ஒரு சில கருத்து கணிப்புகளில் அதிமுகவும் வெற்றிபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கருத்து கணிப்புகளிலேயே வித்யாசங்கள் உள்ளதை நம்மால் பார்க்க முடிகின்றது. சில கருத்து கணிப்புகளில் திமுக, சிலதில் அதிமுக, தவெக வெற்றிபெறும் என ஒரு கருத்து கணிப்பு சொல்கின்றது. இப்படி ரிஸல்ட்ஸ் மாறி மாறி இருப்பதால் கண்டிப்பாக இந்த தேர்தலில் பலத்த போட்டி நிலவி வருவதாக தெரிகின்றது.
இந்நிலையில் அதிமுக சொல்வதை போல 2011, 2016 தேர்தலில் வெற்றிபெற்றதை போல மகத்தான வெற்றியை பெற்று வரலாறு படைப்பார்களா ? அல்லது முதல்முறையாக தொடர்ந்து இருமுறை ஆட்சியை பிடித்து திமுக வரலாறு படைப்பார்களா ? அல்லது தவெகவின் விசில் புரட்சி நடக்குமா ? என்பது இன்னும் நான்கே நாட்களில் தெரிய வரும்.

