Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மேகேதாட்டு அணைக்கு தடை கோரி தமிழக அரசு மனு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

மேகேதாட்டு அணைக்கு தடை கோரி தமிழக அரசு மனு.. இன்று உச்ச நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

Samayam Tamil 1 week ago

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகாவுக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சணை இருந்து வருகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் காவிரி நீரை நம்பியுள்ளனர்.

மேகேதாட்டு அணைக்கு தடை கோரி தமிழக அரசு மனு..

குறிப்பாக, குறுவை, சம்பா போன்ற சாகுபடிகளுக்கு காவிரி நீர்தான் முக்கிய ஆதாரமாக உள்ளது. இப்படி இருக்கையில் புதிய அணை கூடுதல் கட்டினால், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரை கூட பெற முடியாமல் போய்விடும். இதனால் காவிரி நீரைச் சார்ந்துள்ள தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படலாம் என்று தமிழக அரசுவலியுறுத்தி வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணைக்கட்டியே திருவேன் என அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதியாக இருந்து வருகிறார்.

இதற்கிடையே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்று கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வலியுறுத்தி உள்ளது. ஆனால், இதற்கு செவி சாய்க்காத கர்நாடகா அரசு மேகதாட்டுவில் அணைக்கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது தமிழகத்தில் புதியதாக பொறுபேற்றுள்ள தவெக அரசுக்கும், விஜய்க்கும் முக்கிய சவாலாக உள்ளது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்த நிலையில் மேகேதாட்டு அணை விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்எந்தவித உத்தரவோ அல்லது அனுமதியோ வழங்கக் கூடாது எனத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது.நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரணை செய்யவுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

  • காவிரி படுகை என்பது ஏற்கனவே நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதி என்பதால், அங்குச் சிறிய அளவிலான திட்டங்களுக்குக் கூட அனுமதி அளிக்க முடியாது என காவிரி நதிநீர் தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி, கர்நாடகாவின் கோரிக்கையை முன்பே நிராகரித்துவிட்டது.
  • இந்தச் சூழலில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த முயல்வது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும். கீழ் பாசன மாநிலங்கள் பாதிக்கும் வகையில் மேல் பாசன மாநிலங்கள் புதிய திட்டங்களைக் கொண்டு வரக் கூடாது என நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
  • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மட்டுமே அதிகாரம் உள்ளதே தவிர, புதிய திட்டங்களை ஆய்வு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே பயனற்றதாக்கிவிடும்.
  • கர்நாடகாவிடம் உள்ள அணைகள் மற்றும் குளங்கள் மூலம் 218 டி.எம்.சி முதல் 327 டி.எம்.சி வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இது அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 284.75 டி.எம்.சி தண்ணீரை விட அதிகம்.
  • இந்த கூடுதல் நீரைக்கொண்டே கர்நாடகா தனது குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதால், மேகேதாட்டில் புதிதாக அணை கட்ட வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள சில வழிகாட்டுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேகேதாட்டில் அணை கட்ட முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil