கிரகங்களின் தளபதி என அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவான் மே 11 முதல் ஜூன் 21 வரை மேஷ ராசியில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார்.
அங்காரகனின் சஞ்சாரம் பல ராசிகளுக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும், சில உங்களுக்கு சங்கடங்களை தரக்கூடியவராக அமர உள்ளார்.
செவ்வாய் பெயர்ச்சி 2026 : ஜோதிடத்தின்படி, கிரகங்களின் அதிபதியான செவ்வாய் கிரகம், மே 11, 2026 அன்று மதியம் 12:47 மணிக்கு தனது சொந்த ராசியான மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். உருவாகும் ஒருவருக்கு உற்சாகம், துணிச்சல் மற்றும் உறுதியை தரக்கூடியவர். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தால், சில ராசிகளின் செயல்பாடுகளில் உந்துதல், லட்சியம் மற்றும் சூழ்நிலைகளை நன்கு கையாளும் வலுவான சக்தி தரக்கூடியவராக இருப்பார். அதே சூழ்நிலை எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு விரய ஸ்தானமான 12ல் செவ்வாயின் சஞ்சாரம் அதிக அளவில் செலவுகளை தரும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய பணத்தை தேவையற்ற செலவுகளில் இருந்து கட்டுப்படுத்தி, சரியான விதத்தில் பயன்படுத்துவது அவசியம். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அந்த நேரத்தில் உங்களுடைய நிதானத்தை இழக்க வேண்டாம். உங்கள் வார்த்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
உங்கள் எதிரிகள் பிரச்சனையை தர வாய்ப்பு உண்டு. உங்கள் உங்கள் செயல்பாடுகளே கட்டுப்பாடுகள் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் கவனமாக சிந்தித்து செயல்படவும். பணியிடத்தில் வாக்குவாதங்கள், தகராறுகளில் இருந்து விலகி இருக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம்.
மிதுன ராசி

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால், மிதுன ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற உள்ளார். இந்த காலகட்டத்தில் உங்களுடைய நிதி நிலையில் கவனமாக கையாள்வது அவசியம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள், பெற்றோருடன் தேவையற்ற விவாதம் ஏற்படும். உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தை கடைபிடிப்பதோடு உங்களை செய்யக்கூடிய வியாபாரம், தொழிலில் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.
பணியிடத்தில் அனைவரிடமும் நல்லுறவை பேணுவது நல்லது. யாரிடமும் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைக்க வேண்டாம். நிதானம் மற்றும் தைரியத்துடன் வியாபாரம் செய்தல் ஆகியவை உங்கள் நிலையை மேம்படுத்த உதவும்.
கடக ராசி

கடக ராசிக்கு 10ம் ஸ்தானத்தில் செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி, உங்களுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பாக பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இது தொடர்பாக மன அழுத்தம் மற்றும் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் உங்களுடைய கோபத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. இல்லை எனில் உங்கள் சூழலில் மோசமடைய வாய்ப்பு உண்டு.
குறிப்பாக உங்களுடைய உடல் நலம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வண்டி வாகனம் ஓட்டும் போது வேகத்தை விட நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். நிதானம், தைரியத்துடன் செயல்படக்கூடிய எந்த ஒரு செயல்பாடுகளிலும் உங்கள் கடினமான சூழலை எளிதாக்க உதவும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் காரணமாக, பலவிதத்தில் உங்களுக்கு வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் அதற்காக கடினமான முயற்சி, சூழலை சந்திக்க நேரிடும். உங்கள் ஆசைகள் நிறைவேற வாய்ப்பு குறைவாகவே இருக்கும். உங்களுடைய குடும்பம் மற்றும் பணியிடத்தில் சற்று மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சில் அமைதியை கடைபிடிப்பதும் தேவையற்ற ஆக்குவாதங்களை தவிர்ப்பதும் அவசியம். குருட்டு தனமான நம்பிக்கை அல்லது வேகத்தை தவிர்ப்பது நல்லது.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்கள், செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியின் காரணமாக இந்தக் காலகட்டத்தில் உங்களுடைய உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், சில உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் உங்களுடைய உணவு மற்றும், பானங்கள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் கவனம் செலுத்தவும். நிதானமாக வாகனங்களை ஓட்டுவது நல்லது.
நீங்கள் முன்னெடுக்கும் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான முயற்சிகள் சில தடைகளை சந்திக்க நேரிடும். இருப்பினும் பொறுமையுடன் சூழலை கையாளாகவும். உங்களுடைய பேச்சில் முழுமையான கட்டுப்பாடு நன்மை தரும்.
துலாம் ராசி

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் அமைப்பு உங்கள் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் நேரத்தை சரியான விதத்தில் பயன்படுத்துவது நல்லது. இந்த காலத்தில் வேலை, தொழில் தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். இது உங்கள் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக அதிக பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பம் சூழலும் சற்று சங்கடத்தை தர வாய்ப்பு உண்டு. இருப்பினும் உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவதும், சிந்தித்து செயல்படுவதும் நன்மை தரும்.
விருச்சிகம் ராசி

விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் பகவான் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய வேலை, குடும்ப உறவில் சில அழுத்தத்தை தர வாய்ப்பு உண்டு. குறிப்பாக பணியிட அரசியல் சங்கடத்தை தரும். எனவே அதில் இருந்து விலகி இருப்பது அவசியம். உங்கள் சக ஊழியர்களிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்காமல் போகலாம். நீங்கள் எதிர்பாராத விதமாக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் நிதி திட்டங்கள் கவனமாக செயல்படுத்துவது நல்லது.
இந்த காலத்தில் உங்களுடைய இலக்கை அடைய கூடுதல் உழைப்பு தேவைப்படும். அமைதியான மனநிலை பெற முயற்சி செய்யவும். அனைத்து வகையான சவால்களையும் கவனத்துடன் எதிர்கொள்வதன் மூலமும், வெற்றியை அடையும் யோகம் உருவாகும்.
மகர ராசி

செவ்வாய் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால், மகர ராசியில் நண்பர்களுக்கு தங்களுடைய தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய திட்டங்களில் கவனமாக ஈடுபடுவது அவசியம். வண்டி, வாகனம் ஓட்டும்போது நிதானத்தை கடைபிடிக்கவும். பண விஷயங்களில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படவும்.
வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் உங்களுடைய வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். இல்லை எனில் எதிர் வினைகளை சந்திப்பீர்கள். உங்கள் நிதிநிலை தொடர்பாக இழப்பை சந்திக்க நேரிடும். இது மனதளவில் கற்று குழப்பம் மற்றும் தாக்குதல் ஏற்படுத்தும்.

