Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
MLC - சொதப்பிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்: நிதானமாக விளையாடியே வென்ற வாஷிங்டன் அணி

MLC - சொதப்பிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்: நிதானமாக விளையாடியே வென்ற வாஷிங்டன் அணி

Samayam Tamil 1 week ago

மெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் 2026 சீசனின் 16ஆவது லீக் போட்டியில், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும், வாஷிங்டன் பிரீடம் அணியும் மோதின.

இப்போட்டியில், டாஸ் வென்ற லாஸ் ஏஞ்சல்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில், எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, முன்ரோ 25 (31), மேத்யூ ட்ராம்ப் 21 (20), ரௌமேன் பௌல் 30 (19) ஆகிய மூன்று பேட்டர்களை தவிர மற்ற எந்த பேட்டரும் 6 ரன்களை தாண்டவில்லை.

கேப்டன், ஜேசன் ஹோல்டர் 5 (7), சுனில் நரைட் 1 (4), ஆண்ட்ரே ரஸல் 5 (7) போன்ற முக்கிய பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். இறுதியில், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி, 17.5 ஓவர்களிலேயே 108/10 ரன்களை மட்டும் எடுத்து சொதப்பியது.

வாஷிங்டன் பிரீடன் அணியில், சௌரப் நெட்ராவால்கர் 4 ஓவர்களில் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். மிட்செல் ஓவன் 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார். மேலும், பென் ட்வார்ஷியஸ் 3 ஓவர்களில் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், இயான் ஹோலாந்த் 3.5 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்கள்.

வாஷிங்டன் பிரீடம் இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய வாஷிங்டன் பிரீடம் அணியில், ஓபனர் மிட்செல் ஓவன் 6 (3), ஆண்ட்ரஸ் கௌஸ் 6 (9) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பிறகு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடர்ச்சியாக நிதானமாக விளையாடி, 44 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 40 ரன்களை அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

மேலும், மார்க் சாப்மேன் 30 பந்துகளில் 34 ரன்களையும், நிகில் சௌத்ரி 12 பந்தில் 15 ரன்களையும் எடுத்து அவுட் ஆனார்கள். ஸ்மித், கடைசி வரை நிதானமாக விளையாடி, அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இறுதியில், வாஷிங்டன் பிரீடம் அணி, 17.1 ஓவர்கள் முடிவில் 110/4 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியில், சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார், ஜேசன் ஹோல்டர், 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதையும் எடுக்கவில்லை. அலி கான், 4 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதையும் எடுக்கவில்லை.

தற்போதுவரை, 16 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சான் பிரான்ஸிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி, 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், சீடில் ஆர்கஸ், டெக்ஸாஸ் சூப்பர் கிங், வாஷிங்டன் பிரிடன் ஆகிய அணிகளும், தால 6 போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றிகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil