Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதலமைச்சர் விஜய்யின் முதல் டெல்லி விசிட்..யார் யாரை எப்போது சந்திக்கிறார் ? வெளியான அட்டவணை

முதலமைச்சர் விஜய்யின் முதல் டெல்லி விசிட்..யார் யாரை எப்போது சந்திக்கிறார் ? வெளியான அட்டவணை

Samayam Tamil 1 month ago

மிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி செல்ல இருக்கின்றார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய்யின் முதல் டெல்லி பயணம் இது என்பதால் இப்பயணம் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இந்நிலையில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றிருக்கும் விஜய்யின் அட்டவணை வெளியாகி இருக்கின்றது. யார் யாரை எப்போது சந்திக்கின்றார் என்பது குறித்தான முதலமைச்சர் விஜய்யின் பிளான் என்ன ? என்பது பற்றிய அட்டவணை வெளியாகி இருக்கின்றது.

*முதலமைச்சர் விஜய் இன்று காலை பத்து மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்படுகிறார்

*காலை பத்து மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய முதலமைச்சர் விஜய் 12 .30 மணிக்கு டெல்லி சென்றடைவார்

*மாலை 4 .30 மணிக்கு சேவா தீர்த் பவனியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார் முதலமைச்சர் விஜய்

*பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதலமைச்சர் விஜய் மாலை 6 .45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கின்றார்

*அதன் பிறகு இரவு 7 .30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விஜய் சந்திக்கவுள்ளார். அப்போது தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கை மனுவை விஜய் வழங்க இருக்கின்றார்

*நிர்மலா சீதாராமனை சந்தித்த பிறகு இரவு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளார்

*இன்று இந்த சந்திப்புகளை எல்லாம் மேற்கொண்ட பிறகு முதலமைச்சர் விஜய் நாளைய சந்திப்பு விவரங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது

*நாளை காலை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார் முதலமைச்சர் விஜய்

*கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் டெல்லியில் நாளை முதலமைச்சர் விஜய் சந்திப்பார் எனவும் சொல்லப்படுகின்றது. இவ்வாறு முதலமைச்சர் விஜய்யின் இரண்டு நாள் டெல்லி விசிட்டிற்கான அட்டவணை வெளியாகி இருக்கின்றது

இந்நிலையில் பொதுவாகவே தமிழ்நாடு முதலமைச்சர்கள் டெல்லி பயணம் கவனத்தை ஈர்பதாக இருக்கும். அந்த வகையில் தற்போது முதலமைச்சரான பிறகு விஜய்யின் முதல் டெல்லி பயணம் இது என்பதால் இந்த பயணம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் நேரில் சந்தித்தார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் என அனைவரையும் நேரில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய். இது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கின்றார் விஜய். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை சந்திக்கும் விஜய் அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்களையும் சந்திக்க இருக்கின்றார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் முதலமைச்சர் விஜய்சந்திக்க திட்டமிட்டு இருக்கின்றார். இந்த சந்திப்புகள் பல வகையில் முதலமைச்சர் விஜய்க்கு பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. முதலமைச்சர் விஜய் கட்சி துவங்கி இரண்டு ஆண்டுகளே தான் ஆகின்றது.

தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் விஜய்க்கு இந்த பயணம் புது விதமான அரசியல் அனுபவங்களை தரும் என தெரிகின்றது. அதைப்போல பிரதமர் ,காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் அரசியல் அனுபவங்கள் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் உதவும் எனவும் சொல்லப்படுகின்றது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil