முதலமைச்சர் விஜய் தன்னுடைய அலுவலகத்தை சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் விஜய் பார்ப்பதற்காக ஏராளமான அரசு துறை அதிகாரிகள் ,தொழிலதிபர்கள், சிறப்பு விருந்தினர்கள், தொழில் முதலீட்டாளர்கள் என பலரும் வருகை தருகின்றனர். இதனால் இட நெருக்கடி ஏற்படுவதன் காரணமாக தலைமை செயலகத்தில் இருந்த முதலமைச்சர் அறையை தற்பொழுது நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது மாடியில் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளது.முதல்வர் அலுவலகம் மாற்றம்

இதற்கு ஜோதிட ரீதியாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது அதாவது வாழ்க்கையில் உச்சத்தை தொட க்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பத்தாவது மாடியில் இருக்கும் கவிஞர் மாளிகை கூட்டரங்கை அலுவலகமாக மாற்றும் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில்தான் தமிழக முதல்வர்களின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து கடந்த திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் இந்த அலுவலகத்தில் இருந்தே தங்களுடைய ஆட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் விஜய் இந்த அலுவலகத்திற்கு பதிலாக புதிய இடத்தில் அமர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார்.
நாமக்கல் கவிஞர் மாளிகை மறுசீரமைப்பு

அதன்படி தலைமை செயலாக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் அமைந்துள்ள கூட்டரங்கை முதலமைச்சரின் புதிய அலுவலகமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக கட்டமைப்பு நிதியாக ரூபாய் 11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய அலுவலகத்தில் முதலமைச்சர் செயலாளர்கள் அதை கூட்டுறங்கம் பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதி மற்றும் உணவருந்தும் கூடம் என அனைத்து நவீன வசதிகளும் அமைய உள்ளது.
3 மாசத்துல ஆபீஸ் ரெடியாகுமா?

வழக்கமாக இதுபோன்ற பிரம்மாண்ட மாற்றங்களை மேற்கொள்வதற்கு பொதுப்பணித்துறை சார்பில் குறைந்தது ஆறு மாத காலம் வரை அவகாசம் தேவைப்படும் என கூறப்படுகிறது. ஆனால் முதல்வர் அலுவலக தரப்பிலோ அணைத்து பணிகளும் மூன்று மாதங்களுக்குள் கட்டாயம் முடித்து ஒப்படைக்க வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திட்டத்தை கையில் எடுக்க பல ஒப்பந்ததாரர்கள் தயக்கம்

இவ்வளவு குறுகிய காலத்தில் பணிகளை முழுமையாக முடிப்பது சவாலானது என்பதால், இந்த திட்டத்தை கையில் எடுக்க பல ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் இறுதி செய்யப்படுவதில் சிறிது காலதாமதம் நிலவினாலும் 10வது மாடி கூட்டு அரங்கை சுத்தம் செய்யும் முதற்கட்ட பணிகள் ரூபாய் 7.5 லட்சம் செலவில் தற்போது விரைவாக தொடங்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள். புதிய அலுவலகத்திற்காக ரூபாய் 11 கோடி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை முடிக்க குறுகிய காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதால் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்வது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தகுதியான ஒப்பந்ததாரரை அடையாளம் காணும் பணியை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக கூறினர். மேலும் அடுத்த வாரத்தில் கட்டுமானம் மற்றும் அலங்காரப் பணிகள் முழுவீச்சில் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

