Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நேபாளம்-திபெத் எல்லையில் பதற்றம்.. மீட்புப் பணியை நிறுத்திய சீனா - கனமழையால் மீண்டும் ஆபத்து

நேபாளம்-திபெத் எல்லையில் பதற்றம்.. மீட்புப் பணியை நிறுத்திய சீனா - கனமழையால் மீண்டும் ஆபத்து

Samayam Tamil 2 weeks ago

திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண் மற்றும் நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதன் காரணமாகப் போதே கோஷி மற்றும் திரிசூலி நதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


800-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மாயமானவர்களில் ஆன்மிக யாத்திரை சென்றவர்களும், சுற்றுலாப் பயணிகளுமான ஏராளமான வெளிநாட்டினரும் அடங்குவர்.

தொடர்ந்து நேபாளத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணியை சீனா நிறுத்தியுள்ளது.நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் இடர்பாடுகளில் சுமார் 20 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் தேங்கி, ஒரு மிகப்பெரிய ஏரி போன்ற அமைப்பு உருவாகியுள்ளதாகச் சீன அரசு நேற்றைய தினம் எச்சரித்திருந்தது.

திரிசூலி ஆற்றுப் பகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணியின் போது, இந்த இயற்கை ஏரி உடைந்து மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டால் மீட்புப் பணியில் உள்ள வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் திபெத் பகுதியில் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேபாள பகுதியிலும் மீட்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனச் சீன அரசு அறிவுறுத்தியுள்ளது.

திபெத் பகுதியில் நேற்றிலிருந்து மீண்டும் கனமழை பெய்து வருவதால், அந்தச் செயற்கை ஏரியில் நீரின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. அது எந்நேரமும் வெடித்து மீண்டும் ஒரு பெருவெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil