பாக்யராஜ் மறைவு: திரைக்கதை எழுதுவதில் மன்னன் என்று பெயர் எடுத்த கே. பாக்யராஜ் ஜூன் 27ம் தேதி மாரடைப்பால் உயிர் இழந்தார்.
73 வயதான பாக்யராஜ் இறந்த செய்தி வெளியானதும் பிரபலங்கள் மட்டும் அல்ல ரசிகர்களும் முதலில் அதை வதந்தி என்றே நினைத்தார்கள். ஜூன் 25ம் தேதி குஷ்பு மகளின் திருமணத்தில் கலந்து கொண்டாரே. இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என ரசிகர்கள் பேசிய நிலையில் அது உண்மை என தெரிய வந்து வேதனை அடைந்தார்கள்.
பார்த்திபன் கோரிக்கை: குருவின் இறுதிச் சடங்கில் எல்லா வேலையையும் செய்தார் சிஷ்யன் பார்த்திபன். இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிரந்தர கவுரவ தலைவராக கே. பாக்யராஜை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் போவதாக தெரிவித்தார். இதையடுத்து நடந்த திரைப்பட எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் பாக்யராஜின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அப்பொழுது தன் கோரிக்கையை அந்த சங்கத்தினர் முன்பு வைத்தார்.
இரண்டு நல்ல செய்தி: சும்மா இல்லை ஒரு பெரிய அறிவிப்பு பலகையில் அந்த கோரிக்கையை எழுதிச் சென்று அங்கு வைக்க உறுப்பினர்கள் அனைவரும் அதை ஏற்று கையெழுத்திட்டார்கள். இதையடுத்து நிரந்தர கவுரவத் தலைவராகிவிட்டார் கே. பாக்யராஜ். இது குறித்து எக்ஸ் தளத்தில் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அது மட்டும் அல்ல மேலும் ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார் பார்த்திபன். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு கட்டப்படும் கட்டிடத்திற்கு பாக்யராஜ் பெயரை சூட்டவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பார்த்திபன் விளக்கம்: இந்த அளவுக்கு காட்டமாக மெசேஜ் அனுப்பியவரின் பெயரை பார்த்திபன் தெரிவிக்கவில்லை. ஆனால் ரசிகர்களாக ஒரு பிரபலத்தின் பெயரை யூகித்து அவரை விளாசினார்கள். இந்நிலையில் அது குறித்து விளக்கியிருக்கிறார் பார்த்திபன். அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது,
நான் தெரிவித்த விஷயத்தை கேட்டு அந்த நபர் இவராக இருப்பாரோ என மரியாதைக்குரிய இயக்குநர்கள் திரு. பாண்டியராஜன். திரு ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரை விமர்சித்து பதிவுகள் வந்திருப்பதை அறிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். நாகரீகமற்ற அந்த நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலேயே இருக்கட்டும். மேலும் அவர் கக்கிய விஷயம் என் நினைவில் இருந்தும் கரைந்து போகட்டும் என்றார்.
அதை பார்த்தவர்களோ, எங்களுக்கு பாண்டியராஜன், சுந்தர்ராஜன் மீது அல்ல வேறு ஒருவர் மீது தான் சந்தேகம். அவர் தான் மெசேஜ் மூலம் வெறுப்பை கக்கியிருக்கிறார் போன்று. நீங்கள் அந்த பெயரை உங்களின் ட்வீட்டில் குறிப்பிடவில்லை. அதனால் நிச்சயம் அவராக தான் இருக்கக்கூடும் என்கிறார்கள்.
கடித சர்ச்சை: இதற்கிடையே மறைந்த பாக்யராஜ் எழுதியது போன்ற கடிதம் வெளியாகவே அதை எழுதியது சாந்தனு என சிலரும், பார்த்திபன் என சிலரும் தெரிவித்துள்ளனர். மகனுக்காக யார் வீட்டு வாசலிலும் நிற்காதவர், இந்த உலகை விட்டுச் சென்ற பிறகா கடிதம் மூலம் ஆதரவு கேட்பார் என்றார்கள் ரசிகர்கள்.

