தமிழகத்தில் 2026க்கான சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பு எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் 16 நாட்களில் உள்ளது.
இதனால் திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் வாரியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறது.
தமிழக தேர்தல் 2026 விஜய் பிரச்சாரம்
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் களத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முதன்முறையாக விஜயன் தமிழக வெற்றிக்கழகம் தனித்து போட்டியிட உள்ளது.கடந்த மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்த விஜய் கொளத்தூர் மற்றும் பெரம்பூரில் தனது சூறாவளி பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
ஆனால்,அப்போது விதிமுறைகளை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் பிரச்சாரம் நடத்தியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் நடக்க இருந் த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந் து சென்னையில் 4தொகுதிகளில் பிரச்சாரம் நடத்த விஜய் அனுமதி கோரியிருந்தார்.ஆனால், காவல்துறை வில்லிவாக்கம் உள்ளிட்ட 2தொகுதிகளில் 1 மணி நேரம் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் நடத்த இருந்த பிரச்சாரத்தை தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
தென்மாவட்டங்களை குறிவைத்து செல்லும் விஜய்
இந்த நிலையில் தனது அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தென் மாவட்டங்களில் தீவிரபடுத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தயாராகியுள்ளார். அதன் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல் 8-ம் தேதி அதாவது நாளை திருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாக்கிய உள்ளது. திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டைமற்றும் அதன் சுற்றுவட்டார தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் பிரம்மாண்ட வாகன பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றிய உள்ளார்.
இதற்காக டெல்லியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் கட்சி கொடிகள் மற்றும் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விஜயின் வருகையை எதிர்நோக்கி உள்ள தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக காவல்துறையினரிடமிருந்து 55 நிபந்தனைகளுடன் அனுமதி பெறப்பட்டு, பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி விஜய் பொதுக்கூட்டம் அனுமதி
மேலும் விஜய் வாகனத்தில் இருந்தபடியே மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கே.டி.சி. நகர் பகுதியில் போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னரே, பொதுகூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெல்லையில் மூன்று இடங்களில் விஜய் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சென்னையில் ரத்து செய்யப்பட்ட பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது தவெக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருநெல்வேலிவில் விஜய் பிரச்சாரம் ஈடுகட்டுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனை தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளிலும் விஜய் தனது பிரச்சாரத்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

