Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஓ.பி.எஸ்-க்கு திமுகவினர் வரவேற்பு தேர்தலில் வென்றால் முதல்வர் அளிக்கப்போகும் பதவி என்ன?

ஓ.பி.எஸ்-க்கு திமுகவினர் வரவேற்பு தேர்தலில் வென்றால் முதல்வர் அளிக்கப்போகும் பதவி என்ன?

Samayam Tamil 3 months ago

சில தினங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் -க்கு திமுக தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை…நிரந்தர நண்பரும் இல்லை" என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியிருந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை துவங்கிய ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை திரட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து வந்தார்.

அதன்பிறகு பலகட்டங்களில் மீண்டும் அதிமுகவுடன் இணையும் தனது விருப்பத்தை ஓபிஎஸ் பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தார். இருந்தபோதிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அந்த கோரிக்கையை தொடர்ந்து மறுத்து வந்தார். இறுதியாக எந்த சூழலிலும் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணையும் வாய்ப்பு இல்லை என்பது வெளிப்படையானது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் கடந்த ஆண்டு நடந்த தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்குபெற்ற, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் ஆகியோர் ஒன்றாக காரில் பயணித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் இதற்கு காரணமாக அவர் கட்சியை கோட்பாடுகளை மீறி கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுடன் இணைந்து பயணித்தது கட்சியின் எதிர்காலத்திற்கு நன்மை இல்லை என்று கூறப்பட்டது மேலும் செங்கோட்டையனோடு சேர்த்து சில நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியிருந்தார்.

அதற்கு முன்னதாகவே அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை எடப்பாடி ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் இபிஎஸ்க்கு கெடு விதித்தார் சமயம் பார்த்து காத்திருந்த எடப்பாடி இதை காரணமாக வைத்து செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கியதாகும் சில விமர்சனங்கள் அந்த சமயத்தில் எழுந்தன.

இதன் பிறகுதான் ஓபிஎஸ் திமுகவுடன் இணைவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர் ஆனால் ஓபிஎஸ் இன் எதிர்காலத்திற்கு திமுகவுடன் இணைவதே சிறந்த முடிவு என்று சில விமர்சனங்கள் தெரிவித்தனர். காரணம் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் தன்னுடைய பழைய அதிகாரம் மட்டத்திற்குள் சென்று விட முடியும் என அவர் நம்புவதாகவும் கூறப்பட்டது.

மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட்ட பல ஆதரவாளர்கள் ஓபிஎஸ்சை விட்டு நீங்கி தனியாக கட்சி தொடங்கினர் சிலர் திமுகவிலும் சிலர் அதிமுகவிலும் இணைந்தனர். இந்த நெருக்கடியான ஒரு சூழலில் ஓபிஎஸ் இன் எதிர்காலம் என்னவாகும் என்று கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்து விட்டார் மேலும் திமுகவில் அவருக்கு நல்ல மரியாதை கொடுக்கப்படும் என திமுக தலைமை அவருக்கு வாக்களித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என திமுக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஒரு எம்எல்ஏ சீட் ஒதுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான் ஆண்டிபட்டி, தேனி நகரைத் தொடர்ந்து தற்போது அவருடைய சொந்த தொகுதியான போடிநாயக்கனூரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

போடிநாயக்கனூர் அரண்மனை அருகே உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் சிலை ரவுண்டானா பகுதியில் பெண்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர். ஆதரவாளர்கள் மற்றும் தங்கதமிழ்செல்வன் எம்பி தலைமையிலான திமுகவினர் மலர் மாலை அணிவித்து ஓ.பி.எஸ்-க்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil