Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்குவது ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்குவது ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்!

Samayam Tamil 3 weeks ago

மின்பற்ற குறையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் வெளி சந்தையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது அக்டோபர் 12 முதல் 31ம் தேதி வரை 1500 மெகாவாட் வாங்க சராசரியாக யூனிட்டுக்கு 35 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இந்த சூழலில் ஒரு யூனிட் 35 ரூபாய் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த திமுக அரசு, உப்பூர் பவர் பிளான்ட் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளைச் செய்துவிட்டுச் சென்றுள்ளது. கடந்த ஊழல் நிறைந்த திமுக அரசு செய்த செயல்களால் இந்த உப்பூர் பவர் பிளான்ட் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

இத்திட்டத்தில் சுமார் 6,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த உப்பூர் பவர் பிளான்ட் அப்படியே பாதியில் விடப்பட்டது. தற்போது இழந்த திட்டத்தை மீண்டும் மீட்டெடுக்கும் பணிகளில் புதிய திட்ட வரைவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

உப்பூருக்கு எப்படிக் இந்த திட்டத்தை கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சாலை மார்க்கமாகவோ, ரயில் மூலமாகவோ அல்லது கடல் வழியாகவோ கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இருப்பினும், கடல் வழியில் பெரிய அளவிலான கப்பல்கள் உப்பூருக்கு வர முடியாது என்பதால், சிறிய வெசல்கள் மூலமாக உடங்குடியில் இருந்து கொண்டு வர எவ்வளவு செலவாகும் என்பது கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்காகத் தனி ரயில்வே டிராக் அமைத்து சிறிய போர்ட் ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கு ஸ்டாக் யார்ட் அமைப்பது உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் கணக்கிட்டு அதற்கான ப்ராஜக்ட் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்குவது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 3,500 மெகாவாட் கொள்முதல் என அறிவித்திருந்தாலும், Peak Hours-க்கான தேவையில் 1,000 மெகாவாட் அளவுக்குதான் மின்சாரம் கொள்முதல் செய்யப் போகிறோம். மாலை 6 - இரவு 12 மணி வரைக்கான மின் கொள்முதலுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி - ரூ.7 கோடி வரை செலவாகும் என்று கூறினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil