Dailyhunt
PPF முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு.. 5ஆம் தேதியே டெபாசிட் செஞ்சிருக்கலாம்!

PPF முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு.. 5ஆம் தேதியே டெபாசிட் செஞ்சிருக்கலாம்!

Samayam Tamil 2 weeks ago

ந்தியாவில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது.

முதலீட்டாளர்கள் அதன் வரி சேமிப்பு நன்மைகளுக்காகவும் இதை அதிகம் விரும்புகிறார்கள். PPF முதலீட்டாளர்களுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஒரு நிதியாண்டுக்கு அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச வைப்புத்தொகை 500 ரூபாய் ஆகும். அதேபோல, அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

PPF திட்டத்தின் மொத்த முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதை தலா 5 வருடத் தொகுதிகளாக நீட்டிக்கலாம். நீங்கள் PPF திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கான ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை முதலீடு செய்வது மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இப்போது ஏப்ரல் 5ஆம் தேதி முடிந்துவிட்டது. ஏன் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் முதலீடு செய்வது நல்லது என்று பார்ப்போம் வாருங்கள்.

முதலீட்டில் லாபம் பெறுவது எப்படி?

முதலில், PPF திட்டத்தில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். 5ஆம் தேதிக்கும் அந்த மாதத்தின் கடைசி நாளுக்கும் இடையில் உள்ள குறைந்தபட்ச இருப்புத் தொகையின் மீது வட்டி கணக்கிட்டு வழங்கப்படுகிறது. அதாவது, நீங்கள் மாதத்தின் 5ஆம் தேதிக்கு முன் பணத்தை டெபாசிட் செய்தால் முழு மாதத்திற்கான வட்டியையும் பெறுவீர்கள்.

தமிழ்நாட்டில் இன்றைய (ஏப்ரல் 7) முக்கிய வணிகச் செய்திகள்.. பொதுமக்கள் கவனத்துக்கு!

இருப்பினும், நீங்கள் 5ஆம் தேதிக்குப் பிறகு டெபாசிட் செய்தால் அந்த மாதத்திற்கான வட்டியைப் பெற மாட்டீர்கள். மேலும் கணக்கீடு அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும். இதனால்தான் நிபுணர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் முதலீடு செய்யப் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி டெபாசிட் செய்தால் ஒரு முழு மாதத்திற்கான வட்டியை இழப்பீர்கள்.

நீண்ட கால அடிப்படையில் அதிகப் பலன்!

இந்த வித்தியாசம் ஆரம்பத்தில் சிறியதாகத் தோன்றலாம். ஆனால் அதன் உண்மையான தாக்கம் நீண்ட கால அடிப்படையில்தான் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்யப்படும் பணம் நீண்ட காலத்திற்குப் பிறகு கூட்டு வட்டியாக மாறுவதால் இது நிகழ்கிறது. இருப்பினும், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் தாமதமாக முதலீடு செய்தால் ஒவ்வொரு முறையும் ஒரு மாத வட்டியை குறைவாகவே பெறுவீர்கள். இந்தச் சிறிய இழப்புகள் 15 ஆண்டுகளில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிம்.

PPF திட்டம் என்றால் என்ன?

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசால் ஆதரிக்கப்படும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ரிஸ்க் இல்லாத வருமானத்தையும் சிறந்த வரிச் சேமிப்பையும் வழங்குகிறது. இது EEE பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற்றது. முதலீட்டாளர்கள் பிரிவு 80C-இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் ஈட்டப்படும் வட்டி முற்றிலும் வரி இல்லாதது. முதிர்வுத் தொகைக்கும் வரி இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆறாவது ஆண்டிலிருந்து நீங்கள் சிறிதளவு பணத்தை எடுக்கலாம். இருப்பினும், சிறப்புச் சூழ்நிலைகளின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முழுமையாக மூடலாம். ஆனால் இதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil