Dailyhunt
ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அண்ணாமலையுடன் வேட்புமனு தாக்கல் செய்த வானதி ஸ்ரீனிவாசன்!

ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அண்ணாமலையுடன் வேட்புமனு தாக்கல் செய்த வானதி ஸ்ரீனிவாசன்!

Samayam Tamil 2 weeks ago

மிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜகவினர் கூட்டாக இணைந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான் பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன் கோயமுத்தூர் வடக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் மற்றும் அண்ணாமலை அவருடன் இருந்தனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வருடன் வேட்புமனு செய்த வானதி

மேலும் வேப்பு மனு தாக்கல் செய்யாத அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்றைய தினம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த சூழலில் தான் கோவை தடாகம் சாலையில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த சீனிவாசன் வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் முதலமைச்சர் வானதி சீனிவாசனின் வேட்பு மனு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். மேலும் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அவருடன் அண்ணாமலையும் உடன் வந்தார்.

பல நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த பாஜகவின் வேட்பாளர் தேர்வு இறுதி கட்டத்தை எட்டி 27 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக பாஜகவிற்கு கொடுத்த 27 தொகுதிகளிலும் திருப்தி அடையவில்லை என்றாலும் பாஜக அதிமுக கூட்டணி இணைந்தே இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் பிரபல முகமான அண்ணாமலைக்கு இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் உள் கட்சி விவகாரங்கள் பலவற்றை காரணமாக இதற்கு சொல்லப்பட்டாலும் அண்ணாமலை மீது உள்ள அதிருப்தி காரணமாகவே தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலையை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த அமளிகளுக்கு இடையில் தான் இன்றைய தினம் தமிழக பாஜக தலைவர்கள் வீட்டுமனை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனதில் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுவதில் பாஜக கட்சி துவங்கப்பட்ட நாள் இன்றைய தினத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்வது மகிழ்ச்சி என அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட ராஜஸ்தான் முதல்வருக்கும் அண்ணாமலை அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் தெரிவித்தார் .

தொடர்ந்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளதாகவும் போதைப் பொருட்கள் பழக்கம் அதிகரித்து உள்ளதாகவும் அவர் விமர்சித்திருந்தார். மேலும் தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய வானதி
சீனிவாசன் மக்களுக்கான பல நலத்திட்டங்களை முன்னெடுத்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் எஸ்.பி வேலுமணி காலத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை
நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு பாஜக தமிழகத்திற்கு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தமிழக அரசு முடக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் பாஜகவின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான கோயமுத்தூரில் வானதி சீனிவாசன் வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil