Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நாளை சென்னையில் சிறப்பு e-KYC முகாம்!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! நாளை சென்னையில் சிறப்பு e-KYC முகாம்!

Samayam Tamil 1 week ago

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (Ration Card Holders) கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் அலுவலகம் சார்பில் மிக முக்கியமான அவசர அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் விபரங்களைச் சரிபார்க்கும் நோக்கில், நாளை (ஆகஸ்ட் 2, 2026) ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (Ration Shops) சிறப்பு இ-கேஒய்சி (e-KYC) கைவிரல் ரேகை பதிவு முகாம் நடைபெற உள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேகை பதிவு செய்வது கட்டாயம்!

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி (எண்: 480), குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையைக் (Biometric Authentication) கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது வரை பல்வேறு காரணங்களால் தங்களது கைவிரல் ரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்தித் தங்களது விவரங்களை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அரிய வாய்ப்பு!

சொந்த ஊரை விட்டு வேலை, தொழில் அல்லது பணி நிமித்தமாகச் சென்னையின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வாடகை வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் ரேஷன் கடைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தற்போது தற்காலிகமாக வசித்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடைக்கும் (Nearby Ration Shop) நேரடியாகச் சென்று தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்த அறிவிப்பில் ஒரு முக்கியச் சலுகையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுபடாமல் பதிவு செய்ய அரசு வேண்டுகோள்

அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாளை நடைபெறும் முகாமில் தங்களது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகைப் பதிவையும் விடுபடாமல் முழுமையாகச் செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்களின் வசதிக்காக இந்தச் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள் தொடர்ந்து தடையின்றிச் செயல்படவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த இ-கேஒய்சி பதிவு மிக அவசியம் என்பதால், சென்னை மக்கள் அனைவரும் நாளை தங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று இப்பணியை நிறைவு செய்யுமாறு சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil