தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய முக்கியத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடரில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, மறுநாளான ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து,தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
அந்த வகையில், கடந்த 25 ஆம் தேதி இன்றைய கூட்டத்தொடரில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விரிவான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் ஆகியோர் விளக்கமளித்து பதிலுரை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய முக்கியத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெறவுள்ளது.

