Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சந்தா கட்டணக் குழப்பங்களுக்கு தீர்வு: ஆட்டோமேட்டிக் பேமெண்ட் லேபிள் வசதி அறிமுகம்

சந்தா கட்டணக் குழப்பங்களுக்கு தீர்வு: ஆட்டோமேட்டிக் பேமெண்ட் லேபிள் வசதி அறிமுகம்

Samayam Tamil 2 weeks ago

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாழும் சம்பளதாரர்கள் மற்றும் தொழில்முனைவோரின் மாதாந்திர பட்ஜெட்டில், மீள்முறை கட்டணங்கள் (Recurring Payments) முக்கியப் பங்கு வகிக்கின்றன.

OTT, பிராட்பேண்ட், கிளவுட் ஸ்டோரேஜ், ஜிம் சந்தா, காப்பீட்டு பிரீமியம் எனப் பல கட்டணங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே (Auto-debit) கழித்துக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும், பல நேரங்களில் வங்கிக் கணக்கைச் சரிபார்க்கும் போதுதான் எந்த சேவைக்கு எவ்வளவு பணம் போயிருக்கிறது என்ற விபரமே நமக்குத் தெரியவருகிறது.

ஒரே பெயரில் பல கட்டணங்கள்:

உதாரணமாக, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு Google One, YouTube Premium, ChatGPT போன்ற வெவ்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் 'Play Store' என்ற ஒரே பெயரில்தான் வங்கி கணக்கில் காட்டும். இதனால் ஒவ்வொரு மாதமும் எந்த சேவைக்காகப் பணம் கழிக்கப்பட்டது என்பதைத் துல்லியமாக நினைவில் வைத்திருப்பது கடினமாகிறது. அவசியமில்லாத சந்தாக்களை ரத்து செய்ய நினைக்கும் போது, தவறுதலாக முக்கியமான சேவைகளை ரத்து செய்துவிடும் அபாயமும் ஏற்படுகிறது.

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பரான திட்டம்: 1000 ரூபாயில் கணக்கைத் தொடங்கலாம்

Paytm 'Labels' வசதி!

இந்தக் குழப்பத்திற்குத் தீர்வாக, Paytm நிறுவனம் 'Paytm UPI Automatic Payments Labels' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுடைய ஒவ்வொரு தானியங்கி கட்டணத்திற்கும் (Auto-debit mandate) தங்களுக்குப் புரியும் வகையில் பிராட்பேண்ட், OTT, மியூசிக், இன்சூரன்ஸ் எனத் தனிப்பயன் பெயர்களை (Custom Labels) வைத்துக்கொள்ள முடியும். இந்த லேபிள்கள் 'Automatic Payments' பிரிவிலும், கட்டண விவரங்கள் (Payment details) பக்கத்திலும் தெளிவாகக் காட்டப்படும். இதனால் எந்தக் கட்டணம் எதற்காகச் செலுத்தப்படுகிறது என்பதை எளிதாகக் கண்டறியலாம்.

சொந்த வீடு இல்லயா? பெண்கள் பெயரில் ஈசியா கடன் கிடைக்கும்: ஏகப்பட்ட சலுகைகள்

இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது?

  • முதலில் Paytm செயலியில் உள்ள 'Automatic Payments' பகுதிக்குச் செல்ல வேண்டும்.
  • அடுத்து நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் மீள்முறை கட்டணத்தைத் (Recurring Payment) தேர்வு செய்ய வேண்டும்.
  • அங்கு பரிந்துரைக்கப்படும் லேபிளையோ அல்லது உங்களுக்குத் தேவையான தனிப்பயன் பெயரையோ (Custom Name) உள்ளிட்டுச் சேமிக்க வேண்டும்.
  • ஒரு முறை சேமித்த பிறகு அந்தப் பெயரே தொடர்ந்து பட்டியலிலும் பில் விவரங்களிலும் காட்டப்படும்.

தங்கம், வெள்ளி விலையில் பெரிய மாற்றம்: என்ன காரணம்? வாட்சிங் மோடில் முதலீட்டாளர்கள்

மேம்பட்ட நிதி மேலாண்மை!

இன்றைய டிஜிட்டல் உலகில் கட்டண செயலிகள் வெறும் பணப் பரிவர்த்தனையோடு நின்றுவிடாமல், பயனர்களின் நிதி மேலாண்மைக்கும் உதவ வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் இந்த புதிய வசதி ஏற்கனவே உள்ள Monthly AI Spend Summary, Total Balance, Paytm UPI Statement Download மற்றும் Payment Reminder போன்ற பண மேலாண்மைக் கருவிகளுடன் இணைந்து, பயனர்கள் தங்கள் மாதாந்திரச் செலவுகளைத் தெளிவாகத் திட்டமிட பெரிதும் உதவுகிறது. இந் த வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil