Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சார ஜோதிடத்தில் பாவமுனை: அடிப்படை கருத்துகள் மற்றும் விளக்கம்

சார ஜோதிடத்தில் பாவமுனை: அடிப்படை கருத்துகள் மற்றும் விளக்கம்

Samayam Tamil 5 months ago

கேபி உயர் கணித சார ஜோதிடம் என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் அடுத்த பரிணாமம். மாற்றங்களை ஏற்கவில்லை எனில் எந்த ஒரு துறையும் வளறாது என்பதில் ஐயம் இல்லை.

ஒரு கிரகம் நின்ற வீடு, சொந்த வீடு, சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்கள், உச்ச, நட்பு, மூல திரிகோண மற்றும் பகை வீடுகள், அஸ்தங்கம், பரிவர்தனை, வர்கோத்தமம் என்பவற்றை கவனித்து துல்லியம் வர வேண்டுமெனில் மீண்டும் 30 வகையான வர்கச்சக்கரங்கள் , 3000 யோகங்கள் இவற்றையெல்லாம் பார்த்து பலன்களை சொல்ல வேண்டும். அப்படி சொன்னாலும் இரண்டு ஜோதிடர்கள் ஒரே மாதிரியான பலன்களை சொல்வது மிகவும் கடினம் . இத்த ஜோதிட முறை துல்லியமான முக்கியமாக பலரும் ஒரே மாதிரியான பலன்களை சொல்ல முடியும்.

இதன் பொருள் தான் பேசுவன எளிய பொருளுடையனவாகப் பேசித்தான் பிறரிடம் கேட்பனவற்றின் நுண்ணிய பொருளைக் காண்பதே அறிவாகும்.
இப்படி தான் பெற்ற ஜோதிடத்தை, முதலில் தான் உணர்ந்து, பின் அதன் ஆழம் புரிந்து, தான் கற்ற கல்வியில் நுண்ணிய ஜோதிட பொருளைக் கண்டறிந்து, அதை எளிய மக்களுக்கும் எளிமையாக புரிய வைக்கும் பண்புடைய...
குருநாதர் நல்லாசிரியர் A தேவராஜ் ஐயா அவர்களிடம் கற்றதை சிறு ஜாதக ஆய்வுகள் இந்த பதிவில் காணலாம்.

அப்படி வேரூன்றி கனிகொடுக்கும் அற்புத உயர் கணித சார ஜோதிடத்தில் பலன் பெற்றவர்களில் நானுமோர் சிறுவிதை.
அப்படி உயர் கணித சார ஜோதிடத்திலிருந்து, மெல்ல வரும் பூங்காற்றாய்...
வருட வரும் ஜோதிடத் தென்றலை ரசித்து உணர்ந்த எளியவளின் மீண்டுமோர் தொடக்கம்.
விதைப்பதை நாம் விதைத்துவிட்டு விளையுமென்று காத்திருப்போம், இதயத்தில் விளக்கேற்றி …

பாவமுனை ஆரம்பம்
ஒரு குழந்தை எந்த நேரத்தில் பிறக்கின்றதோ அந்த மணித்துளியில்,
அந்த குழந்தையின் விதிக் கொடுப்பினை தீர்மானிக்கப்படுகிறது.
அந்த இடமே(பாகை)
ஒரு குழந்தையின் லக்ன ஆரம்பப் புள்ளியாகும்.
அக்குழந்தையின் பாவத்தொடக்கம்,
விதியின் ஆரம்பம் எனப்படுகிறது.

பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதை அறிவோம்.
23 1/2 சாய்வு பாகையில் பூமி சுற்றுவதும், குழந்தை பிறந்த இடத்தின் தீர்க்க ரேகை, மற்றும் அட்சரேகை இவற்றின் வித்தியாசங்கள் இருப்பதையும் அறிவோம்.
இவை அனைத்தையும் கணக்கில்கொண்டு, திருக்கணித முறைப்படி 12 பாவங்களாக பகுக்கின்றோம். இந்த பாவங்கள் ஒரே பாகை அளவைக் கொண்டதாக இருக்காது என்பதனை மேலே உள்ள விஷயங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil