Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'சத்தமே இல்லாமல் சாதித்த எடப்பாடி'  80 தொகுதிகளில்  அதிமுக  முன்னிலை- சாதிய வாக்குகளை கைப்பற்றியது எப்படி?

'சத்தமே இல்லாமல் சாதித்த எடப்பாடி' 80 தொகுதிகளில் அதிமுக முன்னிலை- சாதிய வாக்குகளை கைப்பற்றியது எப்படி?

Samayam Tamil 2 weeks ago

மிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில்தான் தமிழக வெற்றிக்கழகம் அதிகளவிலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

10 மணி நிலவரப்படி 100 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாது, அதிமுக கூட்டணி 80 -க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தாலும் சற்றும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது. அதோடு மட்டுமல்லாது காலை 10 மணி நிலை வரப்படி அதிமுக 80-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

மேலும் ஆளுங்கட்சியான திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

எடப்பாடி சாதித்தது எப்படி?

  • எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கிய தேர்தலாக 2026 சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்பட்டது.
  • தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பிரவேசம் எடப்பாடி உள்ளிட்ட பலரையும் பாதிக்கும் என சொல்லப்பட்ட சூழலில் திமுகவிற்கு தான் அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • எடப்பாடி பெரிய அளவில் ஊடக வெளிச்சம் பெறாவிட்டாலும் கூட்டணி கூட்டணி வியூகம், சாதியவாக்குகளை தன் தன்வசம் இழுத்து அதிமுக வாக்குகளை சிதறாமல் பெற்றிருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
  • அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கட் கூட்டணி தலைமையான அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டது.
  • மேலும் அதிமுகவின் தேர்தல் வியூகத்தின் படி முழுக்க முழுக்க வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய தொகுதிகளை குறி வைத்து அதிமுகவினர் போட்டியிட்டனர் அது அவர்களுக்கு தேர்தல் சமயத்தில் கை கொடுத்திருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.
  • அதிமுகவிற்கு இருக்கக்கூடிய பாரம்பரிய வாக்குகள் அதிமுகவிற்கு வந்து சேர்ந்திருக்கின்றன.
  • திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய விசிக விற்கு எதிரான பட்டியல் சமூக வாக்குகள் அதிமுகவிற்கு பலத்தை சேர்த்திருக்கின்றன.
  • அதிலும் குறிப்பாக திரு வி க நகர் தொகுதியில் போட்டியிட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை தேர்வு செய்தது , மேலும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோருடனான இணைவு உள்ளிட்ட முக்கிய அதிமுகவிற்கு நல்ல பலனை தந்திருக்கிறது
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil