சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. மதியம் ஒரு மணி நிலவரப்படி விஜய்யின் தவெக முன்னிலையில் இருக்கின்றனர்.
107 இடங்களில் விஜய்யின் தவெக முன்னிலையில் இருக்கும் நிலையில் திமுக 64 இடங்களிலும் அதிமுக 63 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். ஏற்கனவே கணித்தது போல இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். இரு கட்சிகளுக்கு இடையே இருக்கும் வாக்கு வித்யாசங்கள் மிகவும் சொற்பமாகவே உள்ளது.
சில இடங்களில் பத்து வாக்கு வித்யாசங்களில் எல்லாம் முன்னிலையில் இருக்கின்றனர். அந்த அளவிற்கு கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் சென்னை தொகுதிகளில் தவெக ஆதிக்கம் செலுத்தி வருவதை பார்க்க முடிகின்றது. சென்னையில் இருக்கும் 16 தொகுதிகள் அனைத்திலும் தவெக முன்னிலையில் உள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தெற்கு மண்டலத்தில் தவெக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகின்றது. தெற்கு மண்டலத்தில் மொத்தம் பத்து மாவட்டங்கள் உள்ளன. அந்த பத்து மாவட்டங்களில் 58 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தெற்கு மண்டலத்தில் கடந்த முறை திமுக 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்றது. அதிமுக 18 தொகுதிகளில் வெற்றிக்கண்டது. தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் படி பார்க்கையில் திமுக தெற்கு மண்டலத்தில் 23 தொகுதியில் முன்னிலையும் தவெக26 தொகுதிகளில் முன்னிலையும் பெற்று இருக்கின்றனர்.
அதிமுக 9 தொகுதிகளில் லீடிங்கில் இருக்கின்றனர். தெற்கு மண்டலத்தில் திமுக எப்போதும் வலுவாக இருக்கும். ஆனால் இம்முறை புதிதாக களமிறங்கி இருக்கும் தவெகவினர் தற்போதைய நிலவரப்படி தெற்கு மண்டலத்தில் லீடிங்கில் இருக்கின்றனர். ஆனால் திமுக மற்றும் தவெகவிற்கு இடையே இருக்கும் வாக்கு வித்யாசங்கள் சொற்பமாக இருப்பதால் எந்த நேரத்திலும் இந்த முடிவுகளில் மாற்றம் வரலாம் என்பதே அனைவரது கண்டிப்பாகவும் உள்ளது. இருப்பினும் கடந்த முறை அசால்டாக தெற்கு மண்டலத்தை கைப்பற்றிய திமுகவிற்கு இம்முறை தவெக கடும் சவால் கொடுத்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும்.
தெற்கு மண்டலமான திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய தெற்கு மண்டலங்களில் தவெகவும் திமுகவும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வருகின்றனர். மதுரையில் பெரும்பாலும் தவெக தான் முன்னிலையில் இருக்கின்றனர். மதுரை மேற்கு,. தெற்கு, வடக்கு என அனைத்திலும் தவெக வேட்பாளர்கள் தான் முன்னிலையில் இருக்கின்றனர்.
அதைபோல் தூத்துக்குடி தொகுதிகளிலும் பெரும்பாலும் தவெக தான் முன்னிலையில் இருக்கின்றனர். குறிப்பாக திமுக அமைச்சர் கீதா ஜீவன் போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் முன்னிலையில் உள்ளார். மறுபக்கம் தெற்கு மண்டலமான தென்காசியில் திமுக முன்னிலை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இறுதி சுற்று முடியும் வரை தெற்கு மண்டலத்தில் யார் முன்னிலையில் இருப்பார் என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலை தான் உள்ளது. ஆனால் தற்போதைய நிலவரப்படி தெற்கு மண்டலத்தில் தவெக முன்னிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று மாலை ஆறு மணிக்குள் தெற்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார் என்பது உறுதியாக தெரிந்துவிடும்

