தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று (செப்டம்பர் 03) நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், காவல் மரணங்கள் மற்றும் ஆணவக் படுகொலைகள், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றத் தடுப்பு முறைகள்குறித்து அவையில் கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
- எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ள பல்வேறு கேள்விகளால் சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், காவல்துறையின் நவீனமயமாக்கல், புதிய காவல் நிலையங்கள் அமைப்பு, காவலர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தேர்தல் பிரசாரத்தின்போது தவெக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் சிறைத்துறை பணியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- குறிப்பாக, நீண்ட காலமாக நீடித்து வரும் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படுமா, பதவி உயர்வுகளில் நிலவும் குளறுபடிகள் சரிசெய்யப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருக்கின்றனர்.
- இதனைத் தொடர்ந்து விடுமுறை நாட்களுக்குப் பிறகு வரும் திங்கள்கிழமை அன்று இவற்றுக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை வலியுறுத்தும் இந்தத் தனித் தீர்மானம்
அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்மை மொழியாகத் தமிழை அறிவிக்கக் கோரி, மத்திய அரசை வலியுறுத்தும் வகையிலான தனித் தீர்மானம் நாளை சட்டமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது.
மத்திய அரசை வலியுறுத்தும் இந்தத் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியிலேயே வழக்கு விசாரணைகள் மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்றும் இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் விஜய் வசம் உள்ள துறைகள்
- பொது மற்றும் நிர்வாகம்
- காவல்துறை
- உள்துறை
- மகளிர் நலன்
- இளைஞர் நலன்
- குழந்தைகள் நலன்
- முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலன்
- சிறப்புத் திட்டச் செயலாக்கம்
- நகராட்சி நிர்வாகம்
- இந்திய ஆட்சிப் பணி
- காவல் பணி, வனப் பணி
- மாவட்ட வருவாய் அலுவலர்கள்
- நகராட்சி நிர்வாகம்
- குடிநீர் வழங்கல்
காத்துக்கொண்டு இருக்கும் எதிர்க்கட்சிகள்
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மாநிலத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து தடுப்பதில் முக்கிய பங்காற்றும் உளவுத்துறை மற்றும் நுண்ணறிவுப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட உள்ளது.
சட்டம் ஒழுங்கு விவகாரத்தை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் மற்றும் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தவெக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை சம்பவங்களை பட்டியலிட்டு அரசிடம் விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

