செப்டம்பர் மாதம் 2026 கிரகங்களின் அமைப்பு காரணமாக பல்வேறு ராசிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது, உறவு முறைகளில் முன்னேற்றம் என பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும்.
அதே சமயம் சிலர் ராசியை சேர்ந்த நண்பர்கள் அவர்களுடைய தொழில், வேலை, குடும்ப வாழ்க்கை, உடல்நலம் தொடர்பான சில பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. எந்தெந்த ராசியை சேர்ந்தவர்கள் இந்த மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
செப்டம்பர் மாதத்தில் புதன் கன்னி ராசியிலும் மற்றும் சுக்கிரன் துலாம் ராசியில் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புதமான காலமாக அமைகிறது. அதே சமயம் செவ்வாய் கடக ராசியில் நீசம் அடையக்கூடிய காலமாக அமைகிறது. இருப்பினும் குரு உச்சம் பெற்றது கடக ராசியில் இருப்பதால் இது போன்ற கிரக நிலைகள் பல்வேறு விதத்தில் ஒவ்வொரு ராசிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த விதத்தில் எந்தெந்த ராசியை சேர்ந்தவர்கள் செப்டம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.மேஷம் செப்டம்பர் 2026 ராசிபலன்

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கும். கன்னி ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை காரணமாக உங்களுடைய பொறுப்புகளை கவனமாக செய்து முடிப்பது அவசியம். அவசரமாக எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக உடனடி ஆதாயத்தை பெறக்கூடிய முயற்சியை தவிர்க்கவும். இருப்பினும் நீண்ட காலம் முதலீடுகள் மூலம் அதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது பலனைத் தரும். குறிப்பாக உணர்ச்சி வசப்பட்டு நிதி சார்ந்த விஷயங்களை அணுக வேண்டாம்.
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களை ஏற்ற இறக்கம் இருக்கும். குறிப்பாக மனசோர்வு, சீரற்ற உறக்கம் குறித்த விஷயங்கள் உங்களை பாதிக்க வாய்ப்புகள் உண்டு.எனவே உங்கள் ஆரோக்கியம் மற்றும் உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
கடகம் செப்டம்பர் 2026 ராசிபலன்

கடக ராசி சேர்ந்து அவர்களுக்கு எந்த செப்டம்பர் மாதம் தன்னம்பிக்கை மற்றும் தொழில் தொடர்பாக வேகத்தை தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் அதே நம்பிக்கையும் தைரியம் காரணமாக சில தவறுகளையும் செய்ய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நிதிநிலை ரீதியாக உணர்ச்சிவசப்பட்டு செலவுகள் செய்வீர்கள். இது தொடர்பாக நிதானத்தை கடைபிடிக்கவும்.
காதல் மற்றும் உங்களுடைய திருமண வாழ்க்கை விஷயங்களில் உறவுகளை பராமரிப்பது நிதானத்தை கடைபிடிக்கவும். உங்களுடைய தேவையற்ற பேச்சு அல்லது கோபம் உங்கள் துணையை மனதளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது. தனிமையில் இருப்பவர்களுக்கு காதல் தொடர்பான சில மகிழ்ச்சி விஷயங்களை கிடைக்கும்.
இந்த மாதத்தில் உங்கள் வேலையை முடிக்க அதிகப்படியான உடல் உழைப்பு தேவைப்படும். சரியான அளவு தூங்க, ஓய்வெடுக்க நேரத்தை ஒதுக்குங்கள்.
துலாம் செப்டம்பர் 2026 ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம், நாங்கள் தான் செயல் ராசிநாதன் சுக்கிரன் நுழைகிறார். இதன் காரணமாக உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் தொடர்பான பின்பு மற்றும் தொடர்புகளால் வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும் இந்த மாதத்தில் உங்களுடைய உடல் நலம் மற்றும், ஆற்றலை பராமரிப்பதில் கவனம் தேவை. சரியான உடல் நலமுடன் திட்டமிட்டு செயல்படுவதால் மட்டுமே உங்களுடைய செயல்களில் வெற்றி காண முடியும். நிதிநிலை ரீதியாக முன்னேற்றம் இருந்தாலும் உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
தொழில் செய்யக்கூடியவர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தம்பதிகள் பழைய தவறான புரிதலை தீர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தவும். உங்கள் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் உறவு மலர உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
விருச்சிகம் செப்டம்பர் 2026 ராசிபலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் உங்களுடைய தொழில், வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண சரியான வியூகம் அமைத்து செயல்படவும். உங்களுடைய தகவல் தொடர்பு திறன் மேம்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறீர்கள். அதே சமயம் இந்த காலத்தில் வேலைப்பளு, நிதி நிலையை பராமரிப்பதில் சற்று கவனத்தை கடைபிடிக்கவும். முக்கிய பண விஷயங்கள் தொடர்பாக தொலைநோ பார்வையுடன் செயல்படவும்.
காதல் விஷயத்தில் உங்கள் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற கருத்து வேறுபாடுகள், பேச்சுகளால் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தவும். ஆனால் உங்கள் வீட்டில் நிதானத்தை விட்டுக்கொடுத்து சொல்வதும் நல்லது. சிலருக்கு போதிய தூக்கம் இன்மையால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
கும்பம் செப்டம்பர் 2026 ராசிபலன்

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் வேலை, தொழில் வளர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்த்த அளவு உங்களுடைய வேலை பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இந்த மாதத்தில் குடும்பம் தொடர்பான பொறுப்புகள் மற்றும் வேலை தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதில் அதிக கவனம் தேவைப்படும். தொழில் செய்யக்கூடியவர்கள் எதிர்பார்த்த முதலீடு, அல்லது உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைப்பது தொடர்பாக தாமதங்கள் ஏற்படலாம். இதனால் உங்கள் பொறுமைக்கு சோதனையாக அமையும்.
காதல் தொடர்பான விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்லவும். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகளால் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த மாதத்தில் வேலையை சரியாக முடிக்க திட்டமிடுவதும், குடும்பத்தினருடன் நேரம் செல்ல விட முயலவும்.
உங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு மற்றும் உறக்கம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தினமும் உடற்பயிற்சியை தவறாதீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவைப்படும்.

