Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னை பெயரும் வேண்டாம்.. சி.வி. சண்மூகம் பேச பேச முகம் மாறிய முதல்வர் விஜய்.. சட்டபேரவையில் வைத்த கோரிக்கை

சென்னை பெயரும் வேண்டாம்.. சி.வி. சண்மூகம் பேச பேச முகம் மாறிய முதல்வர் விஜய்.. சட்டபேரவையில் வைத்த கோரிக்கை

Samayam Tamil 1 day ago

ட்டபேரவையில் இன்று உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக்கோரும் தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சி.வி. சண்மூகம் பேசுகையில்,

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யுங்கள்

மெட்ராஸ், பாம்பே, கல்கத்தா ஆகிய மூன்றும் சார்ட்டர்ட் உயர் நீதிமன்றங்கள் (Chartered High Courts) ஆகும். 1967-ல் நமது மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகும் மெட்ராஸ் நகரம் 'சென்னை' என மாறிய பிறகும் கூட, உயர் நீதிமன்றம் இன்னமும் 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இதன் பெயரை 'சென்னை உயர் நீதிமன்றம்' என்று மாற்ற மத்திய அரசுக்குத் தீர்மானம் அனுப்பப்பட்டது. அப்போது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டு வந்தது. ஆனால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் பெயர் மாற்றப் பிரச்சனைகள் காரணமாக அச்சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட்டது.

சென்னை பெயரும் வேண்டாம்

இதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் எனக் குறிப்பிட்டால் அது சென்னைக்கு மட்டுமே உரியது போல் தோன்றும் என்பதால் அதை 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என்று மாற்ற வேண்டும் என அம்மா அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஜென்ட்ஸீ (Gen Z) தலைமுறையினருக்கு'மெட்ராஸ்'என்ற பெயரை விட 'சென்னை' என்பதுதான் தெரியும். எனவே, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை 'தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' எனப் பெயர் சூட்டும் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்து அந்த வரலாற்றுப் பெருமையை பெற வேண்டும்.

தமிழை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்

அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஆழமாக வலியுறுத்திப் பேசினார்கள்.

அதிமுக ஆட்சியில் அன்றைய பிரதமரை நேரில் சந்தித்தும், அன்றைய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களிடம் வலியுறுத்தியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், உச்ச நீதிமன்ற முழு அமர்வு இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஒரே வரியில் பதில் அளிக்கப்பட்டது.

பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறும்உச்ச நீதிமன்றம், வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் தெற்கு மாநிலமான நமக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுப் பாகுபாடு காட்டப்படுகிறது.

முதலமைச்சருக்கு சி.வி. சண்மூகம் வேண்டுகோள்

எனவே, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்றுவிடாமல், முதலமைச்சர் அவர்கள் தனிப்பட்ட முறையில் பிரதமரை நேரில் சந்தித்து, இது ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் கோரிக்கை என்பதை எடுத்துக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அனுமதிக்குமாறு தீவிரமாக வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, இத்தீர்மானத்தை வரவேற்கிறேன் என்று கூறினார்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் தளவாய் சுந்தரம் பேச ஆரம்பித்தபோது நான் முன்னாள் சட்டத்துறை அமைச்சராக இருந்தவன். என்னை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என எழுந்து நின்று சி.வி.சண்முகம் ஆவேசமாக குரல் எழுப்பினார். அவரை சமாதானம் செய்ய முற்பட்ட போது கையை தட்டிவிட்டு ஆவேசமாக சென்றவரை மீண்டும் சமாதானம் செய்து கே.பி.அன்பழகன் அமர வைத்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil