Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னையில் போக்குவரத்து மாற்றம்; பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னையில் போக்குவரத்து மாற்றம்; பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

Samayam Tamil 2 weeks ago

சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது. இதனைத் தொடங்கி வைக்க நாளை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.

இந்நிலையில் அவரது வருகையை முன்னிட்டு, நாளை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மாற்றப்பட்ட வழித்தடங்கள்

  • தாம்பரத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகங்கள் குன்றத்தூர் சாலை நோக்கி திருப்பி விடப்படும்
  • பல்லாவரத்தில் இருந்து வரும் வாகங்கள் ஹோட்டல் ஏர்வே அருகே தம்பரம் நோக்கி திருப்பி விடப்படும்
  • கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் 2வது அவென்யூவில் திருப்பி விடப்படும்
  • அசோக் பில்லர் சந்திப்பில் வரும் வரும் வாகனங்கள் கிண்டி சிப்காட், தொழிற்பேட்டை நோக்கி திருப்பி விடப்படும்
  • மவுண்ட் மற்றும் பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மதுரவாயில் நோக்கி திருப்பிவிடப்படும்
  • என சென்னை போக்குவரத்து காவல் துறையினர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னையில் புதிய மெட்ரோ ரயில் வழித்தடத்தைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தரவுள்ளதை முன்னிட்டு, சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, சட்டம் ஒழுங்கு மற்றும் அசாதாரணச் சூழல்களை எதிர்கொள்ளும் வகையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாதுகாப்புப் பணியில் சுமார் 15,000 காவல் துறையினர் நேரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

5 அடுக்கு பாதுகாப்பு வளையம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணி அளவில் விமானம் மூலம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைவார். பிரதமரின் வருகையை ஒட்டி விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் மற்றும் அவர் பயணிக்கும் பாதைகள் வரை 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

15,000 போலீசார் தீவிரக் கண்காணிப்பு

சென்னை பெருநகரக் காவல் ஆணையரின் தலைமையில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உட்பட சுமார் 15,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூந்தமல்லி முதல் வடபழனி வரை இணைப்பு பேருந்து

நாளை பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ சேவை தொடங்க உள்ளது. மஞ்சள் வழித்தடம் என அறிவிக்கப்பட்ட இந்த மெட்ரோ வழித்தடத்தில் மொத்தம் 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களை இணைக்கும், மெட்ரோ இணைப்பு பேருந்து சேவை, நாளை முதல் பூந்தமல்லி மற்றும் வடபழனி வழித்தடத்திலும் இயங்கு என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இன்றும் போக்குவரத்தில் மாற்றம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பங்கேற்கும் "மாணவர்களின் குரல்" நிகழ்ச்சி இன்று அக்டோபர் 10 ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil