Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னையில் மு.க. அழகிரி மருமகன் வீடு உட்பட 3 இடங்களில் IT ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

சென்னையில் மு.க. அழகிரி மருமகன் வீடு உட்பட 3 இடங்களில் IT ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

Samayam Tamil 1 month ago

மிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தேர்தலுகாக வாக்கு எண்ணிக்கை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் இன்றுடன் பிரச்சாரம் ஓய்வுபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பில் காணப்படுகிறது.மேலும், இன்று மாலை 3 மணியுடன் பிரச்சாரம் ஓய்வுபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

மேலும்,தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சென்னை நகரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வீட்டை உள்பட மொத்தம் 3 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மு.க. அழகிரி மருமகன் வீட்டில் திடீர் ரெய்டு

இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தேர்தல் காலத்தில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வாக்காளர்களை கவர்வதை தடுக்க பறக்கும் படைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனை மீறியும் பல பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோக்கம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை தமிழகத்தில் தேர்தல் ஆணையம் 1200 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை

இந்த சூழலில் சென்னை சாஸ்திரி நகர் 11வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் முதற்கட்டமாக சோதனை நடத்தப்பட்டது. அந்த வீடு மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேஷுக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனுடன் அதே பகுதியில் தொழிலதிபர் வெங்கடாச்சலம் என்பவரின் வீடும் வேப்பேரி இ.வி.கே. சம்பத் சாலையில் வசிக்கும் நிதி தொடர்பான தொழிலில் உள்ள பிரவீன் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர். இந்த சோதனையில் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து செயல்பட்டனர். சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திடீர் சோதனையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தேர்தல் நேரத்தில் பணம் பரிமாற்றம் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை வருமான வரித்துறை இதுவரை வெளியிடவில்லை.மேலும் முழுமையான விசாரணை நடத்தப்பட்ட் பின் தான் சோதனைக்காக விவரம் தெரிய வரும்.முக்கிய நபர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கலக்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசியல் கட்சியில் இருக்க கூடிய முக்கிய தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil