Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Serena Williams Motivational quotes: "கனவுகளில் உறுதியாக இருந்து கடினமாக உழைத்தால், எந்த கனவும் நனவாகும்!" செரீனா வில்லியம்ஸ் 5 சிறந்த பொன்மொழிகள்

Serena Williams Motivational quotes: "கனவுகளில் உறுதியாக இருந்து கடினமாக உழைத்தால், எந்த கனவும் நனவாகும்!" செரீனா வில்லியம்ஸ் 5 சிறந்த பொன்மொழிகள்

Samayam Tamil 2 weeks ago

Serena williams quotes in tamil: டென்னிஸில் வரலாறு சாதனைகளை படைத்துள்ள செரீனா வில்லியம்ஸ் கூறிய சிறந்த பொன்மொழிகளும் அவை தன்னம்பிக்கை, கடினமாக உழைப்பது, கனவுகளை அடைவது போன்ற வாழ்க்கை பாடங்களும் இதோ

serena williams Famous quotes: டென்னிஸ் உலகின் மிகச் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படும் செரீனா வில்லியம்ஸ், 23 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்று வரலாறு படைத்தவர். பெண்கள் டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

எத்தனையோ காயங்கள், விமர்சனங்கள், சவால்களை தாண்டி உச்சத்தில் ஜொலித்த செரீனா, தன் வாழ்க்கைப் பயணத்தின் மூலம் நமக்கு சொல்லும் 6 பொன்மொழிகளும், அவை கற்றுத்தரும் பொன்னான பாடங்களும் இதோ"உங்கள் கனவுகளில் உறுதியாக இருந்து கடினமாக உழைத்தால், எந்த கனவும் நனவாகும்!"

சிறுவயதிலிருந்தே உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் செரீனா பயிற்சி மேற்கொண்டார். பல தடைகள் வந்தாலும் தனது இலக்கிலிருந்து அவர் விலகவில்லை. கனவு காண்பது மட்டும் போதாது. அதற்காக தொடர்ந்து உழைக்கும் மனநிலையும் தேவை. விடாமுயற்சியுடன் செயல்படுபவர்களின் கனவுகள்தான் ஒருநாள் நிஜமாகின்றன என்பதே வாழ்க்கை பாடமாகும்


"அதிர்ஷ்டத்துக்கு இதில் எந்த பங்கும் இல்லை; என் வெற்றிக்காக எண்ணற்ற மணிநேரங்கள் உழைத்திருக்கிறேன்!"

பலர் வெற்றியை பார்த்து அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை அவர்கள் பார்ப்பதில்லை. செரீனாவின் சாதனைகளும் பல வருட கடுமையான பயிற்சியின் விளைவுதான். வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் இல்லை. தொடர்ந்து முயற்சி செய்து உழைப்பவர்களுக்கே நீடித்த வெற்றி கிடைக்கும் என்பதே செரினா வலியுறுத்தும் கருத்தாகும்.


"தோல்வி என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது!"

செரீனா தனது வாழ்க்கையில் பல போட்டிகளில் தோற்றுள்ளார். ஆனால் ஒவ்வொரு தோல்வியையும் அவர் புதிய பயிற்சிக்கும் முன்னேற்றத்திற்குமான வாய்ப்பாகவே பார்த்தார்.

தோல்வி என்பது முடிவு அல்ல. அது நம்மை இன்னும் வலிமையாக்கும் ஆசிரியர். தோல்விக்குப் பிறகு எழுந்து நிற்பவர்கள்தான் உண்மையான வெற்றியாளர்கள் என்பதே கற்க வேண்டிய பாடமாகும்.


"ஒரு சாம்பியனை அவரது வெற்றிகள் அல்ல; தோல்விக்குப் பிறகு அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் வரையறுக்கிறது!"

காயங்கள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தாய்மைக்குப் பிறகான சவால்கள் என பல தடைகளை சந்தித்தபோதும், செரீனா மீண்டும் டென்னீஸ் மைதானத்தில் களமிறங்கி போட்டியிட்டார்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் சறுக்கல்கள் வரும். ஆனால், மீண்டும் எழுந்து நிற்பவர்களே சாம்பியன்கள். விழுவது தவறல்ல. எழாமல் இருப்பதுதான் தவறு.


"யாரும் உங்களை நம்பாதபோதும், நீங்கள் உங்களை நம்ப வேண்டும்!"

செரீனாவின் ஆரம்ப காலத்தில் பலர் அவரது திறமையை சந்தேகித்தனர். ஆனால், அவர் தனது திறமையின் மீது வைத்திருந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. தன்னம்பிக்கை இல்லாமல் எந்த சாதனையும் சாத்தியமில்லை. உலகம் உங்களை நம்பும் முன், நீங்கள் உங்களை நம்ப வேண்டும் என்பதே செரீனாவின் பொன்மொழி உணர்த்தும் பாடமாகும்.


செரீனா வில்லியம்ஸ் வாழ்க்கை சொல்லும் தத்துவங்கள்

செரீனா வில்லியம்ஸின் இந்த பொன்மொழிகள் வெறும் விளையாட்டு வீராங்கனையின் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் அனைவருக்கும் வழிகாட்டும் பாடங்களாகும். கனவுகளை விடாமல் பிடித்துக்கொள்வது, கடினமாக உழைப்பது, தோல்வியை கற்றலாக மாற்றுவது மற்றும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது போன்ற முக்கியமான உண்மைகளை அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வெற்றியாளர்கள் பிறப்பதில்லை. தொடர்ந்து போராடி உருவாகிறார்கள் என்பதை செரீனா வில்லியம்ஸ் தனது வாழ்க்கையால் நிரூபித்துள்ளார்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil