Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிஎம் விஜய்யை அடுத்த பிரதமர் என்று கூறும் தவெகவினர்.. சிந்தித்து கூட பார்க்க முடியாது: அடித்து சொன்ன தமிழிசை

சிஎம் விஜய்யை அடுத்த பிரதமர் என்று கூறும் தவெகவினர்.. சிந்தித்து கூட பார்க்க முடியாது: அடித்து சொன்ன தமிழிசை

Samayam Tamil 2 weeks ago

முதல்வர் ஜோசப் விஜய் பிரதமர் வேட்பாளர் என தவெகவை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் இதே போன்று பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று தவெகவினர் பேசி வருவது குறித்து பாஜக மூத்த நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

விஜய் பிரதமர் வேட்பாளர்

விஜய் முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அவர்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அமைச்சர்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். தவெகவும் அதை நோக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில் அரசியல் கட்சி தலைவர்களும் தவெகவினரின் பேச்சுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜகவின் மூத்த நிர்வாகியான தமிழிசை சவுந்தரராஜன் இது தொடர்பாக பேசியுள்ளார்.

பாஜக தமிழிசை சவுந்தரராஜன்

அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் அடுத்த பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் பேசி வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தராஜன், தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சருக்கு மிகப்பெரிய வாய்ப்பினை வழங்கியுள்ளனர். அதனை முதலில் அவர் சரியாக பயன்படுத்த வேண்டும். அவர் கட்சியினரும் சரியாக பயன்படுத்த வேண்டும். மோடி அவருக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாரும் சிந்தித்து கூட பார்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்.

முதல்வர் வேலையை சரியாக செய்ய வேண்டும்

மேலும், மூன்று முறை மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதோடு 25 வருடங்களாக பொது வாழ்க்கையில் நெடுங்கால அரசியல் வாழ்க்கையை பெற்றவர் அவர். எனவே அவருக்கு இணையாக யாரும் பேசக்கூட முடியாது. முதல்வராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அந்த வேலையை முழுமையாக சரியாக செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து அவரிடம் தென் மாநிலத்தில் இருந்து ஒரு பிரதமர் வந்தால் நல்லது தானே என்று கேட்கப்பட்டது.

அதற்கு பிரதமருக்கு தென் மாநிலம், வட மாநிலம் என்றெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் தென் மாநிலம் மீது அதிக அக்கறை கொண்டவர். அதனால் பிரதமருக்கு இணையாக யாரையும் பேச முடியாது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதே போல் நடக்க கூட முடியாது. முதலில் முதலமைச்சர் ஆகியே மூன்று மாதம்தான் ஆகியுள்ளது. சினிமாவில் இருந்து அவர் வந்து மூன்று மாதம் ஆகி, முதல்வர் ஆகி இருக்கீங்க.

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

அதை முதலில் பயன்படுத்துங்க என்பதுதான் என்னுடைய கோரிக்கை என்றார் தமிழிசை சவுந்தரராஜன். ஏற்கனவே நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்பி ஜோதிமணி, இந்தியாவிலே சிறந்த பிரதமர் வேட்பாளர் என்றால் அது ராகுல் காந்திதான். 2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியில் நிச்சயமாக அவர் அமருவார் என கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜக தமிழிசை சவுந்தராஜன், மோடி இணையாக இன்னொரு பிரதமரை நினைத்துக் கூட பார்க்க முடியாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil