Dailyhunt
சிதம்பரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய தமிமுன் அன்சாரி.. மு.க. ஸ்டாலின் சொன்ன வார்த்தை

சிதம்பரம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய தமிமுன் அன்சாரி.. மு.க. ஸ்டாலின் சொன்ன வார்த்தை

Samayam Tamil 5 days ago

திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளது திமுகவினர் மத்தியில் கடுமையான மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இதுக்குறித்து தங்காளின் வருத்தத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நேரில் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் உருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், அவரிடம் நாங்க ஜெயிச்ச மகிழ்ச்சி இல்லை. நீங்க வெற்றி வாய்ப்பை இழந்திட்டாங்கன்னு சொன்னேன். உடனே அதெல்லாம் எதுவும் இல்லை. சவாலான தொகுதியில் ஜெயிச்சு இருக்கீங்க. எவ்வளவு வாக்கு வித்தியாசம் கேட்டாரு. நான் அவர்கிட்ட மொத்த தமிழ்நாட்டு மக்களுடைய மனநிலையும் சோகமாக இருக்கு.

எங்க கட்சில ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம். நீங்க சட்டமன்றம் போகனும். மக்களுடைய மனநிலையும் அதுதான். உங்களுக்காக அந்த தொகுதியை ராஜினாமா செய்றோம். நீங்க அங்க போட்டியிடனும் சொன்னோம். ஆனால் அவர் என் கையை பிடிச்சு, இந்த வார்த்தையை நீங்க சொல்லக்கூடாது. சட்டமன்றத்துக்குள்ள நீங்க போகனும் சொன்னாரு. மறுபடியும் நான் பேச வந்தப்ப, உங்களுடைய குரல் அங்க ஒலிக்கனும்.

இப்படியெல்லாம் பேசக்கூடாது. சிறப்பா செயல்படுங்கன்னு உறுதியாக சொன்னார். நாங்கள் வெற்றி பெற்ற மகிழ்ச்சி கிடையாது. ஒரு கனத்த மௌனம் தான் தமிழ்நாடு முழுக்க நிலவுது. எங்க கட்சி முடிவை, அந்த வார்த்தையே பேசக்கூடாதுன்னு தடுத்துட்டார் என எமோஷனலாக பேசியுள்ளார் தமிமுன் அன்சாரி. மேலும், துர்கா ஸ்டாலின் அங்க நின்னுட்டு இருந்தாங்க அவுங்க கிட்டயும் போய் பேசுனேன். கொளத்தூர்க்கு ரெண்டு நாள் கழிச்சு போக சொன்னேன். மக்களையும் சந்திக்கனும் சொல்லி நேத்தே போயிட்டேன் என்றார்.

அப்போது அவரிடம் ஜெயிச்சு இருந்தால் அவருக்கு கிடைத்து இருக்கக்கூடிய ஆதரவை விட, இப்போ உலக தமிழர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்து இருக்குன்னு சொன்னேன். மு.க. ஸ்டாலின் எங்களை உற்சாகப்படுத்தினாலும், எங்களால் அங்கு இருக்க முடியவில்லை எனவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் தமிமுன் அன்சாரி. இதனிடையில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பினை தவற விட்டு இருந்தாலும், நேற்றைய தினம் அங்குள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றார் மு.க. ஸ்டாலின்.

திறந்த வெளி வேனில் சென்று அங்கு கூடியிருந்த மக்களுக்கு நன்றி கூறினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். மிகவும் எமோஷனலாகி மக்களும் அழுக, அவர்களிடம் அழுகக்கூடாது. அடுத்த தடவை பார்த்துக்கலாம் என ஆறுதல் கூறினார். அதோடு மு.க. ஸ்டாலின் அருகில் இருந்த துறைமுகம் எம்எல்ஏ சேகர் பாபு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது சம்பந்தமான வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

திமுக ஆதரவாளர்கள் பலரையும் இந்த வீடியோ கலங்க வைத்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யாரும் தங்கள் தொகுதிக்கு சென்று நன்றி தெரிவிக்காத நிலையில், முதல் ஆளாக மு.க. ஸ்டாலின் கொளத்தூருக்கு சென்று நன்றி தெரிவித்தது மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. அதோடு அவருடைய இந்த நாகரிக அரசியலை சோஷியல் மீடியாவில் பலரும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil