கேந்திர யோகத்தில் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை, அதாவது சனி கிரகத்திடமிருந்து சூரியன் 90 டிகிரி தொலைவில் நகர்வதால் இந்த இரு கிரகங்களுக்கு இடையே கேந்திர யோகம் உருவாகிறது.
இந்த மங்களகரமான யோகம் காரணமாக சில ராசிகளுக்கு பெரிய அளவில் வெற்றியை, தொட்டதெல்லாம் துவங்கக்கூடிய காலமாக அமையும்.
ஜோதிடத்தின் படி சூரியன் மற்றும் சனி எதிரி கிரகங்களாக உள்ளனர். சூரியன் ஒருவருக்கு தலைமைத்துவம், அரசு பணி, கௌரவம், சமூகத்தில் அந்தஸ்து தரக்கூடியவர். அதே சமயம் சனி பகவான் ஒரு கர்ம காரகன், நீதிமான், செயலுக்கான தைரியம், மற்றும் நீண்ட கால வெற்றியை பிரதிபலிக்கக்கூடிய ஒரு கிரகம் ஆகும். இந்த இரு கிரகங்களின் செல்வாக்கானது ஒரு சிறப்பான கோணத்தில் இணையும் போது சிலருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் உருவாகும்.
இந்த விதத்தில் ஜூலை 6ஆம் தேதி மாலை 4.14 மணிக்கு சூரியன் மற்றும் சனி ஒருவருக்கொருவர் 90 டிகிரி கோணத்தில் அமர்வதால் 'கேந்திர யோகத்தை' உருவாக்குகின்றன. இந்த அமைப்பால் எந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்கவுள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.மிதுன ராசி

சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிக்க கூடிய நிலையில் உங்களுடைய தலைமைத்துவம் மற்றும் மன நம்பிக்கையை வலுப்படுத்துவார். சனி பகவானின் அமைப்பு மற்றும் அவருடைய ஆசீர்வாதத்தில் உங்களுடைய செயல்பாடுகள் சிறப்பாக அமைவதோடு மற்றும் தொழில் தொடர்பாக சரியான முடிவுகளை எடுக்க முடியும் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்த வேலைகளை, தற்பொழுது முயன்றால் பணிகளை விரைவாக முடிக்க முடியும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அன்பையும் நம்பிக்கையும் பெறுவீர்கள்.
உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை, தொழில் தொடர்பாக உங்களுக்கு புதிய வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலை திட்டமிட்டு முறையில் முன்னெடுத்து செல்வதன் மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். இது உங்கள் திறமையை வலுப்படுத்தும்.
கடக ராசி

கடக ராசி அன்பர்களுக்கு இந்த கேந்திர யோகம் அதிர்ஷ்டமாக அமைவதோடு,உங்கள் கர்மாவுக்கான நல்ல பலன்களை. திருமணம் வாழ்க்கையில் இணக்கம் அதிகரிக்கும். கல்வி, விளையாட்டு போட்டி, தேர்வுகள், வேலை அல்லது வியாபாரம் தொடர்பான வெளிநாடு பயணங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகம் தொடர்பாக உங்களுடைய நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் சாதகமான முடிவுகளை பெறுவீர்கள்.
கடக ராசிக்கு கடினமான மற்றும் குழப்பமான நேரத்தில் அனுபவம் வாய்ந்தவரின் வழிகாட்டுதல் கிடைக்கும். பாதியில் தேங்கி கிடந்த அரசு சார்ந்த பணிகள் முடிக்க முடியும். உங்கள் கடின உழைப்பிற்கான மரியாதையும், பலனையும் பெறுவீர்கள்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசி அன்பர்களுக்கு உங்களுடைய படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனம் வெளிப்படக்கூடியதாக இருக்கும். இது உங்களுடைய வேலை தொடர்பான பணியிடத்திலும், தொழில் தொடர்பாகவும் மிகவும் உத்வேகத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். பிள்ளைகளின் கல்வி அல்லது வேலை தொடர்பான விஷயங்களில் கணிசமான முன்னேற்றத்தை காண்பார்கள்.
சூரியன் மற்றும் சனியின் சிறப்பான அருளால் உங்களுடைய தொழில்நுட்பம், பொறியியல், பாதுகாப்பு, ஆராய்ச்சி போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய நபர்களுக்கு சிறந்த காலமாக அமையும்.
தனுசு ராசி

தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு சனி மற்றும் சூரியனால் உருவாக்கும் கேந்திரா யோகத்தின் காரணமாக உங்களுடைய கூட்டு முயற்சி மற்றும் தகவல் தொடர்பு திறன் நல்ல பலனை தரும். தொழில் ரீதியாக உங்களுடைய கூட்டாளிகள் மூலம் வலுவான உறவை மேம்படுத்துவீர்கள். புதிய வாய்ப்புகள் பெற முடியும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் உறவு வலுவடையும்.
இந்த காலத்தில் ஒரு முக்கிய வேலைகளிலும் சாதகமான முடிவுகளை காண்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் சமநிலையை பேணுவது கவனம் செலுத்தவும்.
கும்ப ராசி

கும்ப ராசி அன்பர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் மங்களகரமான கேந்திர யோக அமைப்பானது உங்களுடைய கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய நிதி நிலையம் மேம்படும். கிரகங்களின் அருளால் உங்களுடைய கல்வி மற்றும் வேலைக்கான நேர்காணல், போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள்.
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். நீண்ட காலமாக அடைய நினைத்த இலக்கை அடைய முடியும். இக்காலகட்டத்தில் அதற்கான சாதகமான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பு:
இங்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஜோதிடத் தகவல்களும் தீர்வுகளும் ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இத்தகவல்களைக் கருத்தில் கொள்வதற்கும் முழுமையான விவரங்களைப் பெறுவதற்கும், இது தொடர்பான நிபுணரை அணுகுவது சிறந்தது.

