Dailyhunt
Tamil Nadu Assembly Election 2026 Result: ஒட்டப்பிடாரம் தொகுதியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணசாமி

Tamil Nadu Assembly Election 2026 Result: ஒட்டப்பிடாரம் தொகுதியில் முன்னிலை வகிக்கும் கிருஷ்ணசாமி

Samayam Tamil 1 week ago

ந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இடையில் போட்டிகள் நிலவி வந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

குறிப்பாக திமுக, அதிமுகவை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பின்னிலை வகித்து வருவது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக, தவெகவை தாண்டி தனித்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி ஒரு தொகுதியில் ஸ்கோர் செய்து வருகிறார்.

ஒட்டப்பிடாரம் தொகுதி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் தனித்து தொகுதி. இங்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனித்து போட்டியிட்டு இருந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அவர் தனித்து களம் கண்டு இருந்தார். இந்நிலையில் 651 வாக்குகள் அதிகம் பெற்று டாக்டர் கிருஷ்ணசாமி தற்போதைய சூழ்நிலையில் முன்னிலை வகித்து வருகிறார். இது பலருக்கும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கவனம் ஈர்த்து வரும் நிலையில் பல இடங்களில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு தவெகவினர் டஃப் கொடுத்து வருகின்றனர். இது தமிழ்நாடு அரசியல் களத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது. இதனிடையில் தவெக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி 651 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருவது சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.

இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதி
தீப்பட்டி தொழிற்சாலைகள் பிரதானமாக கொண்ட ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அதே போல் அதிமுக நான்கு முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் மூன்று முறையும் வெற்றி அடைந்துள்ளன. இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனித்து போட்டியிட்டார். அதிமுகவில் கூட்டணியில் அவர் அங்கம் வகித்த நிலையில், கூட்டணியில் இருந்து விலகினார்.

கட்சியினர் உற்சாகம்
இதனையடுத்து தனித்து போட்டியிட போவதாகவும் அறிவித்தார். அதிமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்நிலையில் ஒட்டப்பிடாரம் போட்டியிட்டார் அக்கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி. இவருக்கு தற்போது அந்த தொகுதியில் சாதகமான முடிவு வந்துள்ளது. இது அந்த கட்சியினருக்கு மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

இரண்டாமிடத்தில் தவெக வேட்பாளர்
கிருஷ்ணசாமி 4,520 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரான மதன் ராஜா இருக்கிறார். மூன்றாவது இடத்தில் திமுக வேட்பாளாரான ராம ஜெயம் இருக்கிறார். அவர் 2814 வாக்குகள் பெற்றிருக்கிறார். அதிமுக கூட்டணியில் அம்மமுகவும், நாம் தமிழர் கட்சி சார்பாக அனுசுயா என்பவரும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி கிருஷணசாமி முன்னிலை வகித்து வருகிறார். இந்த டிரெண்ட் அப்படியே நீடிக்குமா என்பதை அடுத்தடுத்த சுற்றுகளில் தெரிய வரும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil