தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்ததை இருந்து வருகிறார் இத்தகைய சூழலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய தலைவர் மற்றும் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் சத்தியமூர்த்தி பவன் அனல் பறக்க காட்சியளிக்கிறது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்
இந்தியாவில் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்து வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு ஆலன் ஆக்டேவியன் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் முக்கிய பங்காற்றியது. பின்னர் அது நாட்டின் முக்கிய அரசியல் கட்சியாக உருவெடுக்க தொடங்கிய பின்னர், இந்திரா காந்தி தலைமையில் வளர்க்கப்பட்டது. தற்பொழுது இந்தியாவில் ஒரு ஆளுமை மிக்க எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.
மேலும் மாநில வாரியாக காங்கிரஸ் கட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே. எஸ் .அழகிரி கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்ற கட்சி விதிகளின்படி, அவரது பதவிக்காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே முடிவடைந்தது. இருப்பினும் அவரது செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தது. இது கட்சியின் உயர் மட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது .அதே நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் நிலவிய உட்கட்டமைப்பு சிக்கல் மற்றும் குழப்பத்தின் காரணமாக தமிழகத்தின் புதிய தலைவரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
செல்வப்பெருந்தகை பதவி சர்ச்சை
இதற்கு இடையே தான், மாநிலத்தில் கட்சியின் செயல்பாடுகள் இடைக்கால ஏற்பாடுகளின் கீழ் கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது .பின்னர் 2024 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் செல்வப் பெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இந்த மாற்றம் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை தொடர்ந்து செயல்பட்டு வருவதாக டெல்லி தலைமைக்கு புகார்கள் சென்றது இருப்பினும் மல்லிகார்ஜுனா கார்கே வின் ஆதரவு செல்வபெருந்துவதற்கு இருப்பதால் தலைவர் பதவிக்கு எந்த ஒரு சிக்கலும் வரவில்லை. இந்த சூழலில் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாற்றப்படுவார் என்று காங்கிரஸ் டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக காங்கிரஸ் கூட்டணி சீட் பங்கீடு
இது குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் கூறியிருப்பதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்க பவிக்கும் காங்கிரஸ் கட்சி 35 தொகுதிகளுக்கு சீட் திமுக விடும் கேட்டு பெற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் காரார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் மத்தியில் கூட்டாட்சி ,மாநிலத்தில் சுயாட்சி மட்டுமே தமிழ்நாட்டில் செயல்படும் என்று முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் சூழல் எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திமுக தலைமையிடம் சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு செய்ததற்கு காங்கிரஸ் டெல்லி தலைமை அதற்கு ஒப்புக்கொண்டது.
செல்வ பெருந்தகை செய்ததாக ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அதிருப்தியும் வருத்தமும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் வேட்பாளர் தேர்வில் தனது ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியதாக செல்வபெருந்தகையின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் கட்சிக்குள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் உச்சமாக வேட்பாளர் தேர்வில் பணம் விளையாடியதாக தமிழக மகளிர் காங்கிரஸ் கட்சி தலைவர் அசினா சையத் செய்தியாளர் சந்திப்பில் பேசியது டெல்லி தலைமையை அதிர வைத்தது.
தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்
அதுமட்டுமின்றி சமீபத்தில் தேர்தல் பரப்புரைக்காக தமிழக வந்த ராகுல் காந்தி கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசிய கருத்துக்கள் அனைத்தும் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாக செல்வ பெருந்தகையின் மீது காங்கிரஸ் தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் செல்வ பெருந்தகை மாற்ற வேண்டும் என்ற முடிவில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை உணர்ந்து கொண்ட செல்வ பெருந்தகை சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக தெரிவித்திருந்த சூழலில், செல்வ பெருந்தகை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியி ல் இருந்து மாற்றப்பட்டால் கார்த்திக் சிதம்பரம் ஜோதிமணி மாணிக்கம் தாகூர் ராஜேஷ் குமார், செல்வகுமார் உள்ளிட்டோர் பதவிக்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அது போல் திருநாவுக்கரசர் கே எஸ் அழகிரி தங்கபாலு இந்த வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை தமிழக காங்கிரஸ் கட்சி பதவியில் இல்லாத ஒரு புதிய நபரை தேர்வு செய்ய டெல்லி தலைமை விருப்பம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது யார் இறுதியில் தலைவராக வருவார் என்பது இன்னும் தெளிவாகாத நிலையில் செல்வ பெருந்தகை தலைவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்படுவது காங்கிரஸ் தலைமை உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
த

