தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.இதன் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனைப்போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்.இந்த நிலையில் இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்ப் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னனி நிலவரம்.
- நேரம்: காலை 10:30
- தவெக-106 முன்னிலையில் உள்ளது.
- அதிமுக-77 2வது முன்னிலையில் உள்ளது.
- திமுக-52 முன்றாவது இடத்தில் உள்ளது.
4 ஆம் சுற்று நிலவரப்படி
- தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அஜித் வாக்குகள் -11148 முன்னிலை
- திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் 10494 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்
- பாஜக வேட்பாளர் நயினார் நாகேரந்திரன் - 9441 வாக்குகள் பெற்று முன்றாம் இடம்
விஜய்யின் தவெக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், காலை 10:3 முன்னிலை நிலவரத்தில்இதுவரை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்று கூறப்படும் நிலையில்,இதுவரை திமுக , அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
4 வது சுற்று நிலவரப்படி
தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 16,692 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்ததாக திமுக 14,141 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிமுக 4,097 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், நாம் தமிழர் கட்சி 1,220 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

