Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழக சட்டப்பேரவை தலைவர் நாற்காலியில் சத்யபாமா: தங்கம் தென்னரசு பாராட்டு

தமிழக சட்டப்பேரவை தலைவர் நாற்காலியில் சத்யபாமா: தங்கம் தென்னரசு பாராட்டு

Samayam Tamil 2 weeks ago

மிழக சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 9, 2026) வரலாற்று சிறப்புமிக்க தருணம் அரங்கேறியது. அதாவது, பேரவைத் தலைவர் நாற்காலியில் முதல்முறை ஒரு பெண் அமர்ந்தார்.

அவர் திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ சத்யபாமா என்பது கவனிக்கத்தக்கது.

சத்யபாமாவிற்கு தங்கம் தென்னரசு பாராட்டு

இதுதொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்தொடரில் பேசும் போது, மாண்புமிகு பேரவை மாற்று தலைவர் அவர்களே, லேடி வெல்லிங்டன் அவர்கள் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு. இன்றைக்கு மாற்றுத் தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது உள்ளபடியே பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

உடனே, மாண்புமிகு உறுப்பினர்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வந்ததும் தனது இருக்கையில் இருந்து எழுந்து அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு சத்யபாமா சென்றார்.

பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்

தனது இருக்கையில் அமர்ந்த பின்னர் பேசிய பேரவைத் தலைவர், மாற்று பேரவை தலைவராக செயல்பட்ட சகோதரி அவர்கள் அவையை மிக சிறப்பாக நடத்தி கொண்டிருந்தார். நான் பார்த்து கொண்டிருந்தேன். அவருக்கு எனது வாழ்த்துகள். அவ்வப்போது தற்காலிக பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலமாக பலருக்கு தங்களை தகுதி படைத்து கொள்ளவும், மற்ற உறுப்பினர்களின் பாராட்டுகளை பெறும் வாய்ப்பும் கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் சத்யபாமா அவர்களுக்கு வாய்ப்பு அளித்தேன். மிக சிறப்பாக நடத்தினார்கள் என்று தெரிவித்தார்.

17வது சட்டப்பேரவையில் 6 பேர் மாற்று பேரவைத் தலைவர்கள்

தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரை அவை நடவடிக்கைகளை வழிநடத்த பேரவைத் தலைவர் இருப்பார். நடப்பு 17வது சட்டப்பேரவையில் ஜே.சி.டி.பிரபாகர் அந்த பொறுப்பை வகிக்கிறார். இவர் வேறு வேலை தொடர்பாக வெளியில் செல்லும் போது பேரவைத் துணைத் தலைவர் கவனிப்பார். அந்த பொறுப்பை துறையூர் எம்.எல்.ஏ ரவிசங்கர் செயல்பட்டு வருகிறார். இவரும் இல்லாத சூழலில் மாற்று பேரவைத் தலைவர்கள் கவனிப்பர். இந்த சட்டப்பேரவையில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாற்று பேரவைத் தலைவர்கள் யார், யார்?

வ.எஸ்எம்.எல்.ஏ பெயர்கட்சி
1விஜய் சரவணன்தவெக
2சத்யபாமாதவெக
3மதார் பதுருதீன்தவெக
4காதர் பாட்சா முத்துராமலிங்கம்திமுக
5தளவாய் சுந்தரம்அதிமுக
6தாரகை கத்பர்ட்காங்கிரஸ்

இவர்களில் 2 பேர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது. பேரவைத் தலைவர், பேரவை துணைத் தலைவர் இல்லாத சமயங்களில் மேற்குறிப்பிட்ட 6 பேரில் யாராவது ஒருவர் அவை நடவடிக்கைகளை கவனிப்பார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil