Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தமிழகத்தில் நாளை (29-4-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை (29-4-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

Samayam Tamil 1 month ago

மிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 29-ந் தேதி புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை ஏப்ரல் 29-ந் தேதி புதன்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.மின் வினியோகம்

தமிழக மக்களுக்கு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்சார சேவையானது பல்வேறு ஊர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இருந்து அவ்வப்போது செய்யப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படுவது வழக்கமான காரியமாகும்.


முழுநேர மின்தடை

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முழு நேர மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.


மின் தடை ஏற்படும் நேரம்

அதன் படி சென்னை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது சிட்கோ திருமலைவாயல் பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 29-04-2026 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாலை 4 மணிக்கு பிறகு பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் சீராகும்.


சென்னை மின் தடை பகுதிகள்:-

வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் ஐ.இ., போத்தூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, கன்னடபாளையம், காட்டூர், அரிக்கம்பேடு, காந்தி நகர்.


பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மேற்கண்ட இந்த பகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ள மின் தடையை பொறுத்து கொண்டு மின் வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மின்சார வாரியத்தின் சார்பில் மக்களிடம் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil