Dailyhunt
தமிழ்நாட்டை ஆளப் போவது யார்? முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் விஜய்யின் தவெக!

தமிழ்நாட்டை ஆளப் போவது யார்? முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் விஜய்யின் தவெக!

Samayam Tamil 2 weeks ago

மிழ்நாட்டை அடுத்து ஆளப் போவது யார் என்று இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த தேர்தலில் அனைவரின் பார்வையும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீது உள்ளது.

ஏனெனில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீண்ட காலமாகவே திமுக - அதிமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. ஆனால் சமீப காலமாகவே மக்கள் மனதில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தேமுதிக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் மீதும் எதிர்பார்ப்புகல் இருந்தன. ஆனால் மக்கள் மத்தியில் அவர்களுடைய செல்வாக்கு குறையத் தொடங்கியுள்ளது. இந் த நேரத்தில் புதிதாக அரசியலில் குதித்த விஜய் மீது ஆர்வம் அதிகரித்தது.

இன்று காலை முதலே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் (ADMK) பின்னுக்குத் தள்ளி, மாநிலத்தின் முதன்மை எதிர்க்கட்சியாக மாறும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் விஜய் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை பெற்று வருகிறார். பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவை மூன்றாவது இடத்திற்குத் தள்ளியுள்ளது. அதேசமயம், திமுக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த மாற்றங்கள் தமிழ்நாட்டின் நீண்டகால இருமுனை அரசியல் கட்டமைப்பில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல் சுற்று முடிவில் 1,669 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இது அவரது கட்சியின் கன்னித் தேர்தலுக்கு (First Election) ஒரு வலுவான தொடக்கமாகக் கருதப்படுகிறது. தற்போது வரை சுமார் 15 தொகுதிகளில் விஜய்யின் TVK முன்னிலை வகித்து வருகிறது. அதே வேளையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி தபால் வாக்குகளில் கணிசமான முன்னிலையைப் பெற்றுள்ளது.

சற்று முன் வெளியான தேர்தல் முடிவு.. திமுகவில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட 31 அமைச்சர்கள் பின்னடைவு!

இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணுவதுடன் தொடங்கிய இந்தத் தேர்தல் முடிவுகள், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மூலம் தொடர்ந்தன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை விவரங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக, இளம் பெண்களின் ஆர்வம், ஆதரவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. சினிமா ரசிகர்கள் என்பதையும் தாண்டி, திமுக - அதிமுக என்ற இருமுனை கட்சிப் போட்டியில் இருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் பரவலாகத் தெரிகிறது. அதன்படி, தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது அதிமுகவை பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சியாக உருவெடுக்குமா அல்லது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படுமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil