Dailyhunt
தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து கூட்டணியில் பேசப்படுமா ? பிரேமலதா விஜயகாந்த் பதில்

தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து கூட்டணியில் பேசப்படுமா ? பிரேமலதா விஜயகாந்த் பதில்

Samayam Tamil 1 week ago

தேர்தல் முடிவுகள் இன்னும் இரண்டே நாட்களில் வெளியாக இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து மே நான்காம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதற்கு முன்னதாக நேற்று முன்தினம் எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியிடப்பட்டன. அந்த எக்ஸிட் போல் ரிசல்ட் கலவையான கணிப்புகளை வழங்கி இருக்கின்றது. சில கணிப்புகள் திமுகவிற்கு சாதகமாக இருக்கும் அதே நிலையில் சில கருத்து கணிப்புகள் அதிமுகவிற்கு சாதகமாகவும் உள்ளது.

மேலும் ஒரு கருத்து கணிப்பில் தவெக இம்முறை வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளது. இப்படி கருத்து கணிப்புகள் வெவ்வேறு ரிசல்ட்டை வழங்கி இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இம்முறை யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மும்முனை போட்டி நிலவி வருவதால் இம்முறை தனிப்பெரும்பான்மை கிடைப்பது கஷ்டம் என்பதே பலரது கருத்தாக இருக்கின்றது.

பிரேமலதா விஜயகாந்த் கருத்து

ஒருவேளை யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சி தொடருமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தன் கருத்தை கூறியுள்ளார். இதைப்பற்றி அவர் பேசியது, ஆக்கப்பொறுத்தவங்க ஆறப்போருங்க என சொல்கின்றேன். இன்னும் இரண்டு நாட்களில் தேர்தல் முடிவுகள் வர உள்ளது. மே நான்காம் தேதி மாலை ஐந்து மணிக்குள் ரிசல்ட் தெரிந்துவிடும்.

எனவே ஆக்கப்பொறுத்தவங்க, ஆறப்போருங்க என சொல்லிக்கொள்கிறேன். நல்லதே நடக்கும்.எங்களை பொறுத்தவரை திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும்.மீண்டும் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராவார் என்றார் பிரேமலதா விஜயகாந்த். மேலும் கருத்து கணிப்புகளை பார்க்கும்போது யாருக்குமே தனி பெரும்பான்மை கிடைக்காது என்பது போல தெரிகின்றது.

தனிப்பெரும்பான்மை

ஒருவேளை தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்திடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ,இதற்கெல்லாம் மே நான்காம் தேதி ரிசல்ட் வெளியான பிறகு நான் பதில் சொல்கின்றேன். அனைவரும் களத்தில் கடுமையாக உழைத்துள்ளோம். கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

அதன் பிறகு இதுகுறித்து எல்லாம் நான் உங்களிடம் பேசுகின்றேன் என்றார் பிரேமலதா விஜயகாந்த். இதற்கு முன்பு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கருத்துக்களை பிரேமலதா விஜயகாந்த் ஆதரித்து பேசியிருந்தார். எனவே தான் இம்முறை ஒருவேளை திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்தான விஷயங்கள் கூட்டணியில் பேசப்படுமா ? என்ற கேள்வி பிரேமலதா விஜயகாந்திடம் முன் வைக்கப்பட்டது.

திமுக வெற்றிபெறும்

ஆனால் இதற்கெல்லாம் ரிசல்ட் வந்த பிறகு பதிலளிக்கிறேன் என தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த். ஆனால் திமுக பொறுத்தவரையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு இல்லை என திட்டவட்டமாக கூறிவிட்டனர். திமுக கூட்டணியில் இருக்கும் தோழமை கட்சிகளும் இதே கருத்தை தான் முன் வைத்தனர். வைகோ, திருமாவளவன் ஆகியோர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்காது என்றனர்.

இந்த சமயத்தில் கருத்து கணிப்புகளை வைத்து பார்க்கையில் தனி பெரும்பான்மை கிடைக்குமா ? என்ற சந்தேகம் வருகின்றது. ஒருவேளை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி காட்சிகள் பங்கு கேட்பார்களா ? என்றும் கேள்வி எழுகின்றது. ஆனால் கண்டிப்பாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதற்கு இடமே இல்லை என்பது தான் திமுகவினரின் முடிவாக உள்ளது.

என்னதான் கருத்து கணிப்புகள் முன்னுக்கு பின் சில இடங்களில் இருந்தாலும் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையில் திமுக கூட்டணியினர் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil