தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று இருக்கின்றனர். திமுக மற்றும் அதிமுக கட்சிகளை தாண்டி தவெக தமிழ்நாட்டில் மகத்தான வெற்றியை பெற்று இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியாமிக்க ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.
108 தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைப்பதற்கு இன்னும் சில தொகுதிகள் தேவைப்படுகின்றன. அதற்கான ஆதரவை சில கட்சிகளிடம் விஜய் நாடி வருவதாக தெரிகின்றது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளிப்பதற்கு சில நிபந்தனைகளை விதித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. குறிப்பாக தவெக ஆட்சியமைப்பதற்கு பாஜகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் பெற கூடாது என்ற நிபந்தனையை காங்கிரஸ் தலைமை விதித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவில் தான் விஜய் ஆட்சியமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருப்பதாக தகவல்
நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் விஜய் தங்களிடம் ஆட்சியமைக்க ஆதரவு கேட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தலைமை ஆலோசனை நடத்திய நிலையில் இறுதி முடிவை தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் கே.சி வேணுகோபால். அப்போதே காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மதசார்பற்ற ஆட்சி தான் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார் கே.சி வேணுகோபால்.
குறிப்பாக பாஜக மற்றும் அதற்கு தொடர்புடைய கட்சிகள் ஆட்சிக்கு வர கூடாது என்பதையும் கே.சி வேணுகோபால் கூறினார். இதனைத்தொடர்ந்து நேற்று காணொளி மூலம் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல். அதன் பிறகு தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் சில விஷயங்களை வலியுறுத்தினார்களாம்.
அதில் மிக முக்கியமாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற கூடாது என்ற கண்டிஷனை விஜய்யிடம் முன் வைத்து இருக்கின்றார்கள். எனவே மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவை தான் விஜய் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதன் மூலம் விஜய் ஆட்சியமைக்க பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தேட மாட்டார் எனவும் காங்கிரஸ் கட்சியின் நிபந்தனையை அவர் ஏற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் தவெகஆட்சியமைக்க விஜய் பாமக ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் பெற கூடாது என கூறியிருப்பதால் பாஜக கூட்டணியின் ஆதரவை விஜய் பெறமாட்டார் என தெரிகின்றது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி மொத்தம் ஐந்து இடங்களில் வெற்றிபெற்று இருக்கின்றது. தேர்தலுக்கு முன்பே விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சித்ததாக தகவல்.
அப்படி இருக்கையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகளை அவர் ஏற்று ஆட்சியமைப்பார் என்றே தெரிகின்றது. அதே சமயம் மீதமுள்ள ஆதரவிற்காக திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளின் ஆதரவை விஜய் நாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விசிக, கம்யூனிஸ்ட், தேமுதிக போன்ற காட்சிகளை விஜய் அணுக வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் எல்லாம் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு, கூட்டணியை விட்டு செல்லமாட்டோம் என கூறிவிட்டனர்.
.இதன் மூலம் இக்கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தர மாட்டார்கள் என்றே தெரிகின்றது. எனவே முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நம்பியே தவெக இருக்கின்றனர். இதற்கிடையில் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்கவும், அமைச்சரவையில் பங்கு கேட்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அநேகமாக இன்று காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தருவார்களா ? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுமாம்.

