Dailyhunt
தவெக வெற்றி பெறாத அந்த 8 மாவட்டங்கள்.. பெரும்பான்மை நிரூபிக்க முடியாததற்கு இதுவும் காரணம்!

தவெக வெற்றி பெறாத அந்த 8 மாவட்டங்கள்.. பெரும்பான்மை நிரூபிக்க முடியாததற்கு இதுவும் காரணம்!

Samayam Tamil 1 week ago

மிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய ஒரு கட்சியாக இருந்தாலும், இந்த அளவிலான வெற்றி பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், அந்தக் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி

இதனால் அவர் இரு இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதன்படி ஒரு தொகுதியை விட்டு விலகிய பிறகு, கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 107 ஆக குறையும். இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 37.92 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்

இருப்பினும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெக தற்போது 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதாவது, பெரும்பான்மை நிரூபித்து ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் குறைவாக உள்ளது.

இந்த நிலையில் ஒரு சுவாரஸ்ய தகவலாக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தவெக, 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அந்த 7 மாவட்டங்கள்

  • விழுப்புரம் - 7 தொகுதிகள்
  • அரியலூர் - 2 தொகுதிகள்
  • நாகை - 3 தொகுதிகள்
  • மயிலாடுதுறை - 3 தொகுதிகள்
  • திருவாரூர் - 4 தொகுதிகள்
  • தென்காசி - 5 தொகுதிகள்
  • கன்னியாகுமரி - 6 தொகுதிகள்
  • நீலகிரி - 3 தொகுதிகள்

என 8 மாவட்டங்களில் உள்ள 33 தொகுதிகளில் ஒன்றில் கூட தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. ஒரு வேளை இந்த 33 தொகுதிகளில் பாதிக்குப் பாதி என்று வெற்றி பெற்றிருந்தால் கூட தனிப்பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைத்திருக்க முடியும்.

விழுப்புரத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. மயிலம் - சி.வி. சண்முகம் (அதிமுக)
  2. திருக்கோவிலூர் - பழனிச்சாமி (அதிமுக)
  3. செஞ்சி - கணேஷ்குமார் (பாமக)
  4. விக்கிரவாண்டி - சிவக்குமார் (பாமக)
  5. திண்டிவனம் (தனி) - வன்னிஅரசு (விசிக)
  6. வானூர் (தனி) - கௌதம் (திமுக)
  7. விழுப்புரம் - லட்சுமணன் (திமுக)

அரியலூரில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. அரியலூர் - தாமரை எஸ். ராஜேந்திரன் (அதிமுக)
  2. ஜெயங்கொண்டம் - வைத்திலிங்கம் (பாமக)

நாகையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. நாகை - ஜவாஹிருல்லா (மமக)
  2. கீழ்வேளூர் (தனி) - லதா (மார்க்சிஸ்ட்)
  3. வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன் (அதிமுக)

மயிலாடுதுறையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ் (காங்கிரஸ்)
  2. பூம்புகார் - நிவேதா முருகன் (திமுக)
  3. சீர்காழி (தனி) - செந்தில் செல்வன் (மதிமுக)

திருவாரூரில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)
  2. திருத்துறைப்பூண்டி (தனி) - மாரிமுத்து (கம்யூனிஸ்ட்)
  3. நன்னிலம் - ஆர்.காமராஜ் (அதிமுக)
  4. மன்னார்குடி - எஸ்.காமராஜ் (அமமுக)

தென்காசியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. தென்காசி - கலைகதிரவன் (திமுக)
  2. ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன் (திமுக)
  3. வாசுதேவநல்லூர் (தனி) - ராஜா (திமுக)
  4. கடையநல்லூர் - ராஜேந்திரன் (மதிமுக)
  5. சங்கரன்கோவில் (தனி) - திலீபன் ஜெய்சங்கர் (அதிமுக)

கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. கன்னியாகுமரி - தளவாய் சுந்தரம் (அதிமுக)
  2. நாகர்கோவில் - ஆஸ்டின் (திமுக)
  3. குளச்சல் - தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்)
  4. விளவங்கோடு - பிரவீன் (காங்கிரஸ்)
  5. கிள்ளியூர் - ராஜேஷ்குமார் (காங்கிரஸ்)
  6. பத்மநாபபுரம் - செல்லசுவாமி (மார்க்சிஸ்ட்)

நீலகிரியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

  1. ஊட்டி - போஜராஜன் (பாஜக)
  2. குன்னூர் - கே.எம். ராஜு (திமுக)
  3. கூடலூர் - திராவிட மணி (திமுக)
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil